ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு
ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு 
தேசம்

போலி ஆவணம்... இந்த ஆண்டு மட்டும் ரூ.20,000 கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு!

காமதேனு

இந்த நிதியாண்டில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.20,000 கோடி வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

போலி ஆவணங்கள்

இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் (ஜிஎஸ்டி) 2017 மார்ச் 29 அன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டு 2017 ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வந்தது. இந்த ஜிஎஸ்டி மூலம் நாட்டில் வரி ஏய்ப்பு முழுமையாக தடுக்கப்படும் என மத்திய அரசு கூறி வந்தது. ஆனால், நடப்பு நிதியாண்டில் கடந்த ஜனவரி மாதம் வரையில், 20 ஆயிரம் ரூபாய் கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, போலி ஆவணங்களை சமர்பித்து இந்த வரி ஏய்ப்பு சம்பவம் அரங்கேறியுள்ளது. உற்பத்தி நிறுவனங்கள் தங்களது பொருட்கள் மீதான ஜிஎஸ்டி-ஐ செலுத்தும்போது மூலப்பொருளுக்கு செலுத்திய ஜிஎஸ்டி-க்கான ஆவணங்களை சமர்ப்பித்து மீதியை மட்டும் கட்டினால் போதும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

அதன்படி, 2023-24 நிதியாண்டில் ஜனவரி வரையிலான கால கட்டத்தில் 1,999 நிறுவனங்கள் ரூ.19,690 கோடி அளவுக்கு போலி ஆவணங்கள் மூலம் வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த நிதியாண்டை விட ( ரூ.13,175 கோடி) அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத், மேற்கு வங்கம், ஹரியாணா அசாம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் தான் அதிகளவில் வரி ஏய்ப்பு நடந்திருப்பதாகத் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக இந்த மாநிலங்களைச் சேர்ந்த நிறுவனங்கள் மீது அதிக அளவில் வழக்குகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

இதையும் வாசிக்கலாமே...  


இன்று பரிசீலனை.. தமிழகத்தில் 39 தொகுதிகளில் 1,403 பேர் வேட்புமனு தாக்கல்!

கை சின்னத்துக்கு வாக்களியுங்கள்; பழசை மறக்காத ஜி.கே.வாசன்... பம்பரத்துக்கு ஓட்டு கேட்ட சி.வி.சண்முகம்!

முதல்ல எல்லா பூத்களுக்கும் ஏஜென்ட் போடமுடியுதானு பாருங்க?... பாஜகவை பங்கம் செய்த வேலுமணி!

அக்காவை தோற்கடித்து, தம்பியை வெற்றி பெற வைக்க வேண்டும்... அமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு இப்படி ஒரு வேலை!

தேறுவாரா திருமா... சிதம்பரம் தொகுதி நிலவரம்!

SCROLL FOR NEXT