சர்வதேசம்

ரஷ்ய அதிபர் புதின் கொல்லப்படலாம் - பாபா வங்காவின் பகீர் கணிப்பு!

காமதேனு

பிறக்கவிருக்கும் 2024 புத்தாண்டில் ஐரோப்பிய நாடுகளில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரிக்கும் என்றும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உயிருக்கு அச்சுறுத்தல் வரலாம் எனவும் பாபா வங்கா கணித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பல்கேரிய மக்களின் நாஸ்ட்ராடாமஸ் என குறிப்பிடப்படும் பாபா வங்கா இதுவரை அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல், செர்னோபில் பேரழிவு, இளவரசி டயானாவின் மரணம் மற்றும் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சி என பல சம்பவங்களை துல்லியமாக கணித்துள்ளார்.

தற்போது, பிறக்கவிருக்கும் 2024ல் ரஷ்ய ஜனாதிபதி புடின் மீதான தாக்குதல் சம்பவம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை கணித்துள்ளதாக கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மீது உள்ளூர் நபர் ஒருவரால் கொலை முயற்சியை பாபா வங்கா கணித்துள்ளார். இதனால் புதின் கொல்லப்பட வாய்ப்புள்ளதாகவும் சொல்லியுள்ளார்.

மேலும், வல்லரசு நாடு ஒன்று உயிரியல் ஆயுதத்தை சோதனை செய்யலாம் அல்லது ஒரு நாட்டின் மீது பயன்படுத்தலாம் என பாபா கணித்துள்ளார். மேலும், ஐரோப்பா முழுவதும் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும் அவர் கணித்துள்ளார்.

அத்துடன், அடுத்த ஆண்டு உலகப் பொருளாதாரத்தை அசைக்கப் போகும் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி குறித்து பாபா எச்சரித்தார். அதாவது அதிகரித்து வரும் கடன் அளவுகள், அதிகரிக்கும் புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் பொருளாதார சக்தி மேற்கிலிருந்து கிழக்கிற்கு மாறுவதால் இந்த நெருக்கடி ஏற்படும் என அவர் விளக்கமளித்துள்ளார். மேலும், பயங்கரமான வானிலை நிகழ்வுகள் மற்றும் இயற்கை பேரழிவுகளையும் 2024ல் எதிர்பார்க்கலாம் என பாபா வங்கா கணித்துள்ளார்.

பாபா வங்கா யார்?: ஒட்டமான் பேரரசில் 1911ல் பிறந்த இவரது இயற்பெயர் வாங்கெலியா பாண்டேவா குஷ்டெரோவா. இவர் வரும் காலம் குறித்துப் பல கணிப்புகளை விட்டுச் சென்றுள்ளார். இவருக்கு 12 வயதாகும் போது மின்னல் தாக்கியதில் பார்வையை இழந்தார். கண் பார்வை போனாலும் கூட அப்போது தான் இவர் எதிர்காலத்தைப் பார்க்கும் சக்தியைப் பெற்றதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகிறார்கள். இவரது கணிப்புகள் எல்லாம் துல்லியமாக இருப்பதே இவரை மற்றவர்களிடம் இருந்து தனித்துக் காட்டுகிறது. 1996ல் மறைந்த இவர் அதற்கு முன்பு வருடம் வாரியாக பல கணிப்புகளை விட்டுச் சென்றுள்ளார்.

SCROLL FOR NEXT