ராமநாதபுரம் உணவகத்தில் தாக்குதல் 
க்ரைம்

பரோட்டா இல்லையா? - ஓட்டல் உரிமையாளருக்கு அடி உதை; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!

காமதேனு

சாயல்குடியில் இரவு 10.30 மணிக்கு மேல் பரோட்டா தர மறுத்ததால் ஹோட்டல் உரிமையாளரை அடித்துத் துவைத்த மர்ம வாலிபர்களால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ராமநாதபுரம் உணவகத்தில் தாக்குதல்

ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் அருகே தொட்டியபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அப்துல் லத்தீப் (45). இவர் சாயல்குடி கன்னியாகுமரி செல்லும் சாலையில் ஜமாலியா என்ற பெயரில் ஓட்டல் நடத்தி வருகிறார். 5 ஆண்டுகளுக்கு மேலாக அப்பகுதியில் ஹோட்டல் நடத்தி வரும் நிலையில், கடந்த ஜனவரி 21 அன்று இரவு 10.30 மணி அளவில் நான்கு வாலிபர்கள் ஓட்டலுக்கு வந்துள்ளனர். அங்கு பரோட்டா உள்ளிட்ட உணவுப் பொருட்கள் முடிந்து விட்டதால் கடையை அடைப்பதற்காகத் தயாராகிக் கொண்டிருந்தார் லத்தீப். அப்போது அங்கு வந்த வாலிபர்கள் அப்துல் லத்தீப்பிடம் பரோட்டா போடு என கூறியுள்ளனர். ஆனால், பரோட்டா தீர்ந்து விட்டது என அவர் கூறியுள்ளார்.

ராமநாதபுரம் உணவகத்தில் தாக்குதல்

இதனால், ஆத்திரமடைந்த நான்கு வாலிபர்களும் ஓட்டலிலிருந்த விறகு உள்ளிட்டவற்றால் ஹோட்டல் உரிமையாளரை அடித்துத் துவைத்தனர். அருகே இருந்த கல்லாப்பெட்டியைக் கீழே தள்ளி சேதப்படுத்தியும் ஆத்திரம் தீராமல் அருகே இருந்த தண்ணீர் தொட்டிக்குள் கடை ஓனரை சொருகி விட்டுச் சென்றனர். தற்போது ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் அப்துல் லத்திப்.

இந்நிலையில் சிகிச்சையில் இருக்கும் பொழுதே சாயல்குடி போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார். ஆனால், போலீஸார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து, மீண்டும் சாயல்குடி போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று தன்னை அடித்து காயப்படுத்திய நபர்கள் மீது வழக்குப் பதியக் கூறி நேற்று இரவு 7 மணி அளவில் புகார் மனு அளித்துள்ளார். அதன் பேரில் போலீஸார் தாக்குதல் நடத்திய வாலிபர்கள் குறித்த விபரங்களைச் சேகரித்து வருகின்றனர்.

ராமநாதபுரம் உணவகத்தில் தாக்குதல்

ஓட்டல் உரிமையாளர் அப்துல் லத்தீப் கூறியதாவது, “சாயல்குடியில் சமீப காலங்களாக ரவுடிகளின் தொல்லை அதிகளவு உள்ளது. போலீஸார் இரவு நேர ரோந்து பணியை தீவிர படுத்த வேண்டும். இதனால் வணிகர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. நடந்த சம்பவத்தால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். எனவே என் மீது தாக்குதல் நடத்திய வாலிபர்கள் மீது வழக்குப் பதிந்து அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வேதனையுடன் தெரிவித்தார். ஓட்டல் உரிமையாளரை வாலிபர்கள் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது,

இதையும் வாசிக்கலாமே...


தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்க இன்று இரவு ஸ்பெயின் புறப்படுகிறர் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

அன்பு மகளே....இளையராஜா கண்ணீர் பதிவு!

விஜய் எனக்குப் போட்டி என்றால் மரியாதை இல்லை... ரஜினி பரபர பேச்சு!

மூன்று தொகுதிகள் வேண்டும்... முரண்டு பிடிக்கும் கமல்... திகைக்கும் திமுக!

ஆட்சியைக் கவிழ்க்க திட்டம்... 15 எம்எல்ஏக்களை இழுக்க பேரம்... முன்னாள் முதல்வரின் முயற்சியால் பரபரப்பு!

SCROLL FOR NEXT