கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம் 
க்ரைம்

ஓராண்டுக்கு பிறகு மேலும் ஒருவர் கைது: கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கில் என்.ஐ.ஏ அதிரடி!

காமதேனு

கோவையில் நடந்த கார்குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக மேலும் ஒருவரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கோவையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உக்கடம் கோட்டமேடு பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோயில் முன்பு கார் ஒன்று வெடித்து சிதறியது. விபத்து என முதலில் கருதப்பட்ட நிலையில் போலீஸார் மற்றும் என்.ஐ.ஏ அதிகாரிகளின் தொடர் விசாரணையில், இந்த சம்பவத்தில் உயிரிழந்த ஜமேஷா முபின், காரில் குண்டை வெடிக்க வைத்து தீவிரவாத செயலில் ஈடுபட திட்டம் தீட்டியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து என்.ஐ.ஏ அதிகாரிகள், தீவிர விசாரணை நடத்தி இவ்வழக்கில் இதுவரை 13 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம்

இந்நிலையில், இந்த வழக்கில் 14வது நபராக கோவை போத்தனூரை சேர்ந்த தாஹா நசீர் என்பவரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். நசீர் கோவை சவுரிபாளையம் பகுதியில் உள்ள கார் நிறுவனத்தில் பெயின்டராக பணியாற்றி வந்துள்ளார். சம்பவம் நடைபெறுவதற்கு முந்தைய நாள் நசீர், ஜமேஷா முபினை நேரில் சந்தித்து நீண்ட நேரம் பேசியதாக கிடைத்த தகவலின் பேரில் இந்த கைது நடவடிக்கையை என்.ஐ.ஏ அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். இதையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நசீரை வருகிற 17ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

14வது நபராக என்.ஐ.ஏவால் கைது செய்யப்பட்டுள்ளா தாஹா நசீர்
SCROLL FOR NEXT