பீகார் ரயில் விபத்து 
க்ரைம்

பகீர்... பீகார் ரயில் விபத்துக்கு காரணம் இதுதான்!

காமதேனு

பீகாரின் பக்ஸாரில் உள்ள ரகுநாத்பூர் ரயில் நிலையம் அருகே நேற்று காலை கெளஹாத்தி வடகிழக்கு எக்ஸ்பிரஸ் ரயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் மூன்று பெண்கள் உட்பட 6 பேர் பலியாகினர்.

தகவல் அறிந்து விரைந்து சென்ற ரயில்வே போலீஸார் மற்றும் ரயில்வே அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் உயிரிழந்த 4 பேரில் இரண்டு பேர் தாய், மகள் என்பது தெரியவந்துள்ளது. மேலும், உயிரிழந்த ஆண் யார் என்பது குறித்து தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பீகார் ரயில் விபத்து

இந்நிலையில், இந்த விபத்திற்கான காரணம் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் சம்பவத்தன்று காலை 9.40 மணியளவில் 128 கிலோ மீட்டர் வேகத்தில் வந்ததாகவும், திடீரென ரயில் ஓட்டுநர் பிரேக் பிடித்ததில் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதாகவும் தெரிய வந்துள்ளது.

இதில் ரயில் முழுவதும் கவிழ்ந்த நிலையில், இரண்டு குளிர்சாதனப் பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தது. அதில் பயணம் செய்த 4 பேர் உயிரிழந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில் மேலும் 3 பேர் காயமடைந்த நிலையில், அதில் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால், பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

SCROLL FOR NEXT