கைது செய்யப்பட்ட இளைஞர்கள் 
க்ரைம்

பைக்கில் சாகசம் செய்த 9 இளைஞர்கள் கைது; ஓட்டுநர் உரிமம் ரத்து... திருச்சி போலீஸார் அதிரடி!

காமதேனு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பைக் சாகசத்தில் ஈடுபட்ட 9 இளைஞர்களை கைது செய்துள்ள திருச்சி போலீஸார், அவர்களது ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

திருச்சி மாவட்டம், சமயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பள்ளிவிடை சிறுமருதூர் தேசிய நெடுஞ்சாலையில் இளைஞர்கள் சிலர் தங்களது இருசக்கர வாகனத்தின் முன்புறம் தீபாவளி பட்டாசுகளைக் கட்டிக்கொண்டு கடந்த 9ம் தேதி இரவு சாலைகளில் அதிவேகத்தில் வீலிங் செய்து பட்டாசுகளை வெடித்து சாகசம் செய்தனர்.

இது தொடர்பான காட்சிகளைத் தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டனர். இந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து, திருச்சி மாவட்டக் காவல்துறையினர் சாகசம் செய்த இளைஞர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வந்தனர்.  

இதையடுத்து,   திருச்சி மாநகரில் பைக் வீலிங் செய்வது தொடர்பாக இன்று காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.  அப்போது திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இளைஞர் ஒருவர் பைக் வீலிங் செய்து கொண்டிருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் காவல்துறையினர் அங்கு சென்று பார்த்ததில் இளைஞர் ஒருவர் பைக் வீலிங் செய்து கொண்டிருந்தார். அவரை காவல்துறையினர் பிடித்து விசாரித்ததில் அவர் திருச்சி டைமண்ட் பஜாரை சேர்ந்த உசேன் பாஷா(24) என்பது தெரியவந்தது.  அதனையடுத்து காவல்துறையினர் உசேன் பாஷாவை கைது செய்து அவர் பைக் வீலிங் செய்ய பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

அதேபோல் திருச்சி பால் பண்ணை பகுதியில் தாராநல்லூர் பகுதியை சேர்ந்த ராஜேஷ்(21) என்பவர் அதிவேகமாக பைக் ஓட்டி சாகச முயற்சியில் ஈடுபட்டார். அவரை காந்தி மார்க்கெட் காவல்துறையினர் கைது செய்து அவரிடம் இருந்து இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

மேலும் குழுமாய்கரை ரோட்டில் பைக் வீலிங் செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற அரசு மருத்துவமனை காவல் நிலைய காவல்துறையினர் பைக் வீலிங் செய்து கொண்டிருந்த நபரை பிடித்து விசாரித்ததில் அவர் கல்லாங்காடு பகுதியை சேர்ந்த அஜய் என்பதும் இவர்தான் பைக் வீலிங் செய்து கொண்டு பட்டாசு வெடித்த இளைஞரில் ஒருவர் என்பதும் தெரிய வந்தது.

அதனையடுத்து அவரையும் காவல்துறையினர் கைது செய்து அவர் பைக் வீலிங் செய்ய பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். பைக் வீலிங் செய்து கொண்டே பட்டாசு வெடித்த விவகாரத்தில் தஞ்சாவூரை சேர்ந்த மணிகண்டன் என்பவரை தனிப்படை அமைத்து காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இதுவரை 9 பேரை கைது செய்துள்ள காவல்துறையினர் அவர்களது ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்வது தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

கவுண்டர் பையனைத்தான் கல்யாணம் கட்டுவோம்; உறுதிமொழி எடுத்த பெண்கள்: திமுக கூட்டணி கட்சி நிர்வாகியால் சர்ச்சை!

HBD Mamta Mohandas|புற்றுநோய் தந்த பயமும்...விட்டிலிகோ தந்த நம்பிக்கையும்!

காதலை ஏற்க காதலன் குடும்பம் மறுப்பு… காதலி மர்மமான முறையில் மரணம்!

உஷார்; தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் கனமழை: ஆட்சியர்களுக்கு வருவாய்த்துறை அவசர கடிதம்!

அதிர்ச்சி: தாத்தா ஓட்டிய காரின் சக்கரத்தில் சிக்கி 2வயது குழந்தை பலி!

SCROLL FOR NEXT