அஜ்மல் கான்-ரமீசா கஹானி 
சினிமா

'சாட்டை' ஹீரோ யுவனுக்கு நடந்த கோலாகல திருமணம்... பிரபலங்கள் வாழ்த்து!

காமதேனு

அன்பழகன் இயக்கத்தில் உருவான ‘சாட்டை’ படம் மூலம் சினிமாவில் பிரபலமானவர் நடிகர் யுவன். இவருக்கு நடைபெற்ற திருமணத்தில் திரையுலக, அரசியல் பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

அஜ்மல் கான்-ரமீசா கஹானி

’சாட்டை’ , ‘அடுத்த சாட்டை’ , ‘கமர்கட்டு’, ’கீரிப்புள்ள’, ’இளமி அய்யனார் வீதி’ போன்ற பல படங்களில் கதாநாயகனாக நடித்தவர் யுவன் என்ற அஜ்மல் கான். இவருடைய தந்தை பிரோஸ் கான் ஒரு தொழிலதிபர். இவரும் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் .

நடிகர் யுவன் என்ற அஜ்மல் கானுக்கும், கும்பகோணம் தங்க விலாஸ் அதிபர் சாதிக் அலி மகள் ரமீசா கஹானிக்கும் நிக்கா மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தேறியது. இந்நிகழ்ச்சி விஜிபி ரீசார்ட்டில் மிகப் பிரம்மாண்டமான மேடை அமைத்து அதில் திரளான மக்கள் முன்னணியில் நடைபெற்றது .

இந்த திருமண விழாவில் ஏராளமான அரசியல் பிரமுகர்கள், திரை நட்சத்திரங்கள் மற்றும் தொழில் அதிபர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் திரையுலக பிரமுகர்கள் மன்சூர் அலிகான், ரியாஸ்கான் ,உமா ரியாஸ்கான் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, மிஸ் இந்தியா சினேகா மற்றும் தொழிலதிபர்கள் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

’சாட்டை’ படத்தில்...

'சாட்டை’, ‘அடுத்த சாட்டை’ போன்ற 15-க்கும் மேற்பட்டப் படங்களில் நடித்திருந்தாலும் கொரோனா உள்ளிட்ட சில காரணங்களால் சினிமாவுக்கு பிரேக் விட்டிருந்தார். கொரோனா சமயத்தில் ஈசிஆர் பகுதியில் ஓட்டல் ஒன்றையும் ஆரம்பித்து அதை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.யுவனின் திருமணத்திற்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளைச் சொல்லி வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

இன்று தொடங்குகிறது சிபிஎஸ்இ தேர்வுகள்... 39 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்!

பாஜக நிர்வாகி ஓட ஓட வெட்டிக் கொலை...மதுரை சுங்கச்சாவடி அருகே பயங்கரம்!

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை... தேர்தல் பத்திரத் திட்ட வழக்கில் இன்று தீர்ப்பு!

சீமானுக்கு அதிர்ச்சி கொடுத்த தேர்தல் ஆணையம்... கைவிட்டு போனது ‘விவசாயி சின்னம்’!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 60,000 ரூபாய் சம்பளத்தில் வேலை... விண்ணப்பிக்க இன்றே கடைசி தேதி!

SCROLL FOR NEXT