சுரேஷ் கோபி
சுரேஷ் கோபி 
சினிமா

சீண்டிப் பார்க்க வேண்டாம்... பாஜக நடிகர் சுரேஷ் கோபி எச்சரிக்கை!

காமதேனு

பாஜக முன்னாள் எம்.பியும், நடிகருமான சுரேஷ் கோபியின் மகள் திருமணம் சமீபத்தில் நடைபெற்றது. இதில், அவரது மகள் அணிந்திருந்த நகைகள் குறித்தான சர்ச்சை எழுந்துள்ளது. இதற்குதான் இப்போது சுரேஷ் கோபி விளக்கம் கொடுத்துள்ளார்.

சுரேஷ் கோபி மகள் திருமண வரவேற்பில்...

மலையாள நடிகர் சுரேஷ் கோபியின் மகள் திருமணமும் நிச்சயதார்த்தமும் சமீபத்தில் நடைபெற்றது. கேரளா, குருவாயூர் கிருஷ்ணர் கோயிலில் நடந்த இவரது மகள் திருமணத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். இதுமட்டுமல்லாது நடிகர்கள் மோகன்லால், மம்முட்டி, ஜெயராம், திலீப், பிஜு மேனன், ஷாஜி கைலாஸ், பார்வதி, குஷ்பு உள்ளிட்ட நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர்.

திருமணம் முடிந்த இரண்டு நாட்களிலேயே திருமண வரவேற்பும் நடைபெற்றது. சுரேஷ் கோபியின் மகள் பாக்கியாவுக்கும், தொழிலதிபர் ஸ்ரேயஸ் மோகனுக்கும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இப்படியான சூழலில்தான் பாக்கியா அணிந்திருந்த நகைகள் குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.

அதாவது, இந்த நகைகள் அனைத்தும் சுரேஷ் கோபிக்கு அரசியல் ரீதியாக அன்பளிப்பாக வழங்கப்பட்டவை என்றும், இவை எதற்கும் முறையாக வரி கட்டப்படவில்லை என்றும் சர்ச்சை எழுந்தது.

இதற்கு தற்போது சுரேஷ் கோபி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் விளக்கம் கொடுத்துள்ளார். அதில் ’என் மகளின் திருமணத்தில் அவர் அணிந்திருந்த நகைகள் குறித்து பல தவறான கருத்துக்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. அந்த நகைகள் அனைத்தும் முறையாக ஜிஎஸ்டி செலுத்தப்பட்டு மற்ற வரிகள் எல்லாம் செலுத்தப்பட்டு என் மகள் பாக்யாவிற்கு பெற்றோர் நாங்களும் எங்கள் முன்னோர்களும் கொடுத்த நகைகள்தான். இந்த நகைகள் சிலவற்றை சென்னை மற்றும் ஹைதராபாத்தில் உள்ள நகை செய்யும் நிபுணர்கள் செய்து கொடுத்தனர். அதனால், என்னையும் என் குடும்பத்தையும் சீண்டிப் பார்க்க வேண்டாம்’ எனக் கூறியுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...


ராமர் கோயிலில் இன்று முதல் தரிசனம்... கட்டுக்கடங்காத கூட்டம்; ஆர்ப்பரிக்கும் பக்தர்கள்!

முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டு பயணம்... இன்று கூடுகிறது அமைச்சரவை... என்னென்ன முக்கிய முடிவுகள்?

நவீன நீர்வழித் திட்டத்தின் நாயகன்... காலமானார் ஏ.சி.காமராஜ்

விடிய விடிய நடந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை; சிக்கிய சார்பதிவாளர்... கோவையில் பரபரப்பு!

சீனாவில் 7.2 ரிக்டரில் பயங்கர நிலநடுக்கம்... வீடுகள் சேதம்; ரயில் சேவை பாதிப்பு - டெல்லியிலும் நில அதிர்வு!

SCROLL FOR NEXT