ஷாக் சம்பவம்... ஆன்லைனில் ஆர்டர் செய்தது மில்க் ஷேக்; டெலிவரி ஆனதோ சிறுநீர்!

சிறுநீர் - மில்க்‌ஷேக்
சிறுநீர் - மில்க்‌ஷேக்

ஆன்லைனில் கேட்டது ஒன்று கிடைத்தது மற்றொன்றாக, விசித்திர அனுபவங்கள் பலருக்கும் இருக்கும். ஆனால் அமெரிக்காவில் மில்க் ஷேக் ஆர்டர் செய்தவருக்கு, சிறுநீர் டெலிவரி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் இந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது. கலேப் உட்ஸ் என்னும் நபர் ஆன்லைன் வாயிலாக தனக்குப் பிடித்த பிரெஞ்ச் பிரை மற்றும் மில்க் ஷேக் ஆகியவற்றை ஆர்டர் செய்துவிட்டு காத்திருந்தார். க்ரப்ஹப் என்ற அப்பகுதியின் பிரபலமான ஆன்லைன் சேவை செயலி வாயிலாக அவர் ஆர்டர் செய்திருந்தார். சரியான நேரத்தில் டெலிவரி ஏஜெண்ட் பதார்த்தங்களை சேர்ப்பித்தார்.

மில்க் ஷேக்
மில்க் ஷேக்

அதனை பாராட்டும் முகமாக வழக்கத்தை விட அதிகமாக டிப்ஸ் அளித்து டெலிவரி ஏஜெண்டை வழியனுப்பி வைத்தார் உட்ஸ். அதன் பின்னர் ஆவலுடன் மில்க் ஷேக்கை எடுத்து ருசித்தவர், திடுக்கிட்டுப்போனார். அது மில்க் ஷேக் அல்ல; மனிதரின் சிறுநீர் என்பதை முதல் சிப் மூலமே கண்டுபிடித்துவிட்டார். கொதித்துப்போனவராக டெலிவரி ஏஜெண்டை போனில் அழைத்தார்.

குழப்பத்துடன் வந்த டெலிவரி ஏஜெண்டிடன் வூட்ஸ் நியாயம் கேட்டார். உடனடியாக தவறை ஒப்புக்கொண்ட ஏஜெண்ட், விசித்திர விளக்கம் ஒன்றை அளித்தார். 'உணவு டெலிவரிக்காக காரில் நீண்ட நேரம் பயணிக்கையில் அவசரமாக சிறுநீர் வந்தால் காலிக்குடுவையில் பிடித்து காரில் வைப்பது வழக்கம்; அது எப்படியோ கைமாறி உங்களிடம் வந்து விட்டது’ என்று கூலாக தெரிவித்திருக்கிறார் டெலிவரி ஏஜெண்ட்.

காலேப் வூட்ஸ் மற்றும் அவருக்கு டெலிவரியான சிறுநீர் குடுவை
காலேப் வூட்ஸ் மற்றும் அவருக்கு டெலிவரியான சிறுநீர் குடுவை

உச்சா ருசிக்க வைத்த ஆன்லைன் நிறுவனத்தின் மீது உச்சக்கட்ட கோபம் கொண்ட வூட்ஸ், நடந்ததை புகாராக அளித்தார். பதில் நடவடிக்கையாக மில்க் ஷேக் ஆர்டர் தொகையில் பகுதியை மட்டும் திருப்பி அளித்த ஆன்லைன் நிறுவனம், டெலிவரி ஏஜெண்டின் ஒப்பந்தத்தை ரத்து செய்ததாக அறிவித்தது. இதில் திருப்தி அடையாத வூட்ஸ், நடந்ததை சமூக ஊடகத்தில் பதிவேற்றி குமுறி வருகிறார்.

இதையும் வாசிக்கலாமே...

2023 கிரிக்கெட் : சர்வதேச போட்டிகளில் அதிக ரன்களைக் குவித்த வீரர்கள்... டாப் லிஸ்ட்டில் 3 இந்தியர்கள்!

நெகிழ்ச்சி... சொந்தக் காரை விற்று ஆதரவற்றோருக்கு தீபாவளி பரிசு தந்த தமிழ் யூடியூபர்!

கனமழை : மிதக்கும் சென்னை... வெள்ளக்காடான சாலைகள்... ‘டெங்கு’ பயத்தில் அலறும் பொதுமக்கள்!

மேடையில் உற்சாக நடனமாடிய முதல்வர்... ஆரவாரத்தில் அதிர்ந்த அரங்கம்!

அதிர்ச்சி... ஐஐடிவளாகத்தில்மாணவியைத்தூக்கிச்சென்றுபாலியல்தொல்லை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in