கட்டுக்குள் வராத நீரிழிவு தொந்தரவா? போதிய உறக்கம் இல்லாததும் ஒரு காரணமாக இருக்கக்கூடும்

 நீரிழிவு பாதிப்பும், உறக்கமும்
நீரிழிவு பாதிப்பும், உறக்கமும்

நீரிழிவு தொந்தரவுக்கு ஆளானவர்களில் சர்க்கரை அளவு கட்டுக்குள் வரவே மாட்டேன் என்பவர்கள், தங்களது உறக்கத்தின் அளவு மற்றும் தரத்தை சரிபார்ப்பது அவசியமாகிறது

கட்டுப்பாடற்ற நீரிழிவு பிரச்சினைக்கு தூக்கமின்மையும் ஒரு காரணமாக இருக்கக்கூடும் என்கின்றன மருத்துவ ஆய்வுகள். போதிய உறக்கம் இல்லாதது மற்றும் உறக்கத்தை ஒத்திப்போடுவது ஆகியவற்றால் மனித உடலில் ஏற்படும் பாதிப்புகளில் இனி கட்டுப்பாடற்ற நீரிழிவு பிரச்சினையையும் சேர்த்துக்கொள்ளலாம். எனவே நீரிழிவு கட்டுக்குள் வர மறுக்கிறது என்று புலம்புவோர், தங்கள் உறக்கம் குறித்தும் சற்று பரிசீலிக்கலாம்.

நீரிழிவு நோய் பரிசோதனை
நீரிழிவு நோய் பரிசோதனை

நடப்பு வாழ்க்கை முறையில் நீரிழிவு என்பது சகலமானோரையும் பாதித்து வருகிறது. நீரிழிவு உறுதி செய்யப்பட்டாலும், முறையான உணவு, உடற்பயிற்சி உள்ளிட்டவற்றை பழக்கிக்கொண்டால் போதும். சர்க்கரை அளவு சமர்த்தாய் கட்டுக்குள் வந்து விடும்.

இந்த பட்டியலில் தற்போது உறக்கத்தையும் சேர்த்துக்கொள்வது இனி அவசியமாகிறது. அதிலும் மருந்து, உணவு, உடற்பயிற்சி எனப் பலவற்றையும் முறையாக பின்பற்றியபோதும் நீரிழிவானது கட்டுக்குள் வரமாட்டேன் என்கிறது என்பவர்கள் அன்றாடம் உறங்கும் முறையை தீவிரமாக பரிசீலித்தாக வேண்டும்.

ஏனெனில் தூக்கமின்மை என்பது உடலின் குளுக்கோஸ் அளவை பல்வேறு வழிகளிலும் பாதிக்கவே செய்கிறது. மனித உடல் போதிய ஓய்வு மற்றும் உறக்கத்தை இழக்கும்போது, பசியின்மை மற்றும் வளர்சிதை மாற்றம் ஆகியவற்றை ஒழுங்குபடுத்தும் ஹார்மோன்களின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக நீரிழிவு பாதிப்பு கண்டவர் அதிகமாக சாப்பிட நேரிடலாம். இதன் விளைவாக இரத்தத்தில் சர்க்கரையின் அதிகரிக்கக் கூடும். போதிய உறக்கம் இல்லாதது இன்சுலின் எதிர்ப்புக்கும் வழிவகுக்கும்.

நீரிழிவும், உறக்கம் கெடுவதும் தொடர்புடையவை
நீரிழிவும், உறக்கம் கெடுவதும் தொடர்புடையவை

பல ஆய்வுகளின்படி, தூக்கம் என்பது அதன் அளவு மற்றும் தரம் ஆகிய இரண்டிலும், டைப் 2 நீரிழிவு நோயாளியின் வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் திறனை பாதிக்கிறது. தூக்கத்தின் அளவு தேவைக்கு மிகுந்தாலும், குறைந்தாலும் டைப் 2 நீரிழிவை தூண்டும்.

உடல் குளுக்கோஸை எவ்வாறு பயன்படுத்துகிறது என்பதைக் கட்டுப்படுத்த தூக்கம் முக்கியமானது. எனவே தூக்கத்தை தவிர்ப்போர் நீரிழிவு அபாயத்தை தவிர்க்கவும், நீரிழிவு கண்டவர்கள் தங்கள் சர்க்கரை அளவு எப்போதும் கட்டுக்குள் இருக்கவும் போதிய அளவு உறக்கத்தை அன்றாடம் உறுதி செய்வது அவசியமாகிறது.

இதையும் வாசிக்கலாமே...  

அதிர்ச்சி... போதையில் விமானம் ஓட்டும் பைலட்கள்... 6 மாதங்களில் 33 பைலட்கள் உட்பட130 பேருக்கு தண்டனை!

கூட்டமும் சேரவில்லை; கூட்டணியிலும் ஒற்றுமையில்லை... தேர்தல் பிரச்சாரத்தை பாதியில் நிறுத்திய ராதிகா!

இப்படியெல்லாமா விளையாடுறது?... குடல் வெடித்து வாலிபர் சாவு!

இப்படி ஆயிடுச்சே.. ராமநாதபுரத்தில் சுயேட்சையாக போட்டியிடும் ஓபிஎஸ்... 5 ஓபிஎஸ்-களின் வேட்பு மனுக்கள் ஏற்பு!

’பப்’பில் நைட் பார்ட்டி... ஸ்ருதிஹாசனுடன் செம ரொமான்ஸில் லோகேஷ்?! கதறும் கோலிவுட்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in