பனிக்குடம் உடைந்து கதறிய கர்ப்பிணி: 108 ஆம்புலன்ஸில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!

108 ஆம்புலன்ஸில் பிரசவம்
108 ஆம்புலன்ஸில் பிரசவம்

கோவையில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் 108 ஆம்புலன்ஸிலேயே கர்ப்பிணிக்கு குழந்தை பிறந்ததை அடுத்து ஊழியர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

கோவை மாவட்டம். லக்ஷ்மி நகர், நல்லாம்பாளையம் ரோடு, ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர் பழனிமுருகன். இவரின் மனைவி மம்தா (29). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று இரவு வீட்டில் இருக்கும்போது பனிக்குடம் உடைந்து, மிகுந்த வலியுடன் துடித்து வந்தார் இதையடுத்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

108 ஆம்புலன்ஸ்
108 ஆம்புலன்ஸ்

உடனடியாக காந்திபுரம் 108 ஆம்புலன்ஸ், மம்தா வீட்டிற்குச் சென்று பார்க்கும்போது அவருக்கு வலி அதிகரித்ததோடு, குழந்தையின் தலை வெளியே வந்தது. இதையடுத்து ஆம்புலன்ஸ் மருத்துவ நிபுணர் கோபாலகிருஷ்ணன் மற்றும் பைலட் ஜெயக்குமார் உதவியுடன் பிரசவம் பார்க்கப்பட்டது. இதையடுத்து மம்தாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து, கோவை அரசு மீனாட்சி தாய் சேய் நல மருத்துவமனையில் சிகிச்சைக்காக தாய், சேய் இருவரையும் சேர்த்தனர்.

108 ஆம்புலன்ஸ்
108 ஆம்புலன்ஸ்

அவர்களைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், இருவரும் நலமுடன் இருப்பதாக தெரிவித்தனர். அவசரம் கருதி பிரசவம் பார்த்த ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in