சரவெடி தீபாவளி: சிவகாசியில் ரூ.6 ஆயிரம் கோடிக்கு பட்டாசுகள் விற்பனை!

தீபாவளி
தீபாவளி
Updated on
1 min read

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிவகாசியில் தயாரிக்கப்பட்ட பட்டாசுகள் ரூ.6 ஆயிரம் கோடிக்கு விற்பனையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விற்பனை அதிகமானாலும் லாபம் இல்லை என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

பட்டாசு
பட்டாசு

தீபாவளியையொட்டி, நாடு முழுவதும் ரூ.6 ஆயிரம் கோடி அளவுக்கு பட்டாசுகள் விற்பனையானது. சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிறிய மற்றும் பெரிய அளவில் 1,070 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. நாட்டின் மொத்த பட்டாசு உற்பத்தியில் இங்கு 95 சதவீதத்துக்கு மேல் இங்கு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, சிவகாசி பட்டாசு ஆலைகளில் பசுமைப் பட்டாசு மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது.

வழக்கமான உற்பத்தியை விட இந்த ஆண்டு 50 முதல் 70 சதவீதம் வரை உற்பத்தி அதிகப்படுத்தியதாக கூறப்படுகிறது. பட்டாசு தயாரிப்பின் போது ஏற்பட்ட விபத்து காரணமாக 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் தமிழக அரசும் அதிகாரிகளும் அதிக கெடுபிடிகள் காட்டியதாக கூறப்படுகிறது.

சிவகாசி பகுதியில் மட்டும் தீபாவளி பண்டியையொட்டி ரூ.6 ஆயிரம் கோடிக்கு பட்டாசு விற்பனை நடைபெற்று உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு ரூ.5 ஆயிரம் கோடிக்கு மட்டுமே விற்பனையான நிலையில் இந்த ஆண்டு விற்பனை அதிகரித்துள்ளது. ஆனால் அதற்கு அதிகப்படிய உழைக்க வேண்டியிருந்தது.

பெங்களூரு பகுதியில் ஏற்பட்ட பட்டாசு கடை விபத்தால் அங்கு பட்டாசு விற்பனைக்கு அம்மாநில அரசு கடுமையான கட்டுப்பாடு விதித்தது. இந்நிலையில் சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் ஓசூர் பகுதியில் தற்காலிக பட்டாசு கடைகளுக்கு உரிமம் பெற்று கடந்த 10 நாட்களாக பட்டாசு விற்பனையில் தீவிரம் காட்டினர். அதன் விளைவாகத்தான் இவ்வளவு விற்பனை செய்ய முடிந்தது என்றனர் வியாபாரிகள்.

இதையும் வாசிக்கலாமே...

கவுண்டர் பையனைத்தான் கல்யாணம் கட்டுவோம்; உறுதிமொழி எடுத்த பெண்கள்: திமுக கூட்டணி கட்சி நிர்வாகியால் சர்ச்சை!

HBD Mamta Mohandas|புற்றுநோய் தந்த பயமும்...விட்டிலிகோ தந்த நம்பிக்கையும்!

காதலை ஏற்க காதலன் குடும்பம் மறுப்பு… காதலி மர்மமான முறையில் மரணம்!

உஷார்; தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் கனமழை: ஆட்சியர்களுக்கு வருவாய்த்துறை அவசர கடிதம்!

அதிர்ச்சி: தாத்தா ஓட்டிய காரின் சக்கரத்தில் சிக்கி 2வயது குழந்தை பலி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in