என்னாது... ஐஸ்கிரீம் சாப்பிட்டால் இவ்வளவு சிக்கலா?

என்னாது...  ஐஸ்கிரீம் சாப்பிட்டால் இவ்வளவு சிக்கலா?

ஐஸ்கிரீம் சாப்பிடுவதன் மூலம் உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் வகையிலான  பல உடல் மாற்றங்கள் ஏற்படும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன. 

கோடை காலம் என்றாலே  சர்பத், ஜூஸ் உள்ளிட்ட குளிர்பானங்களையும் ஐஸ்கிரீம் உள்ளிட்டவற்றையும் மக்கள் தேட ஆரம்பித்துவிடுவார்கள். அதிலும் ஐஸ்கிரீம்  என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் விருப்பமான ஒன்றாகும். ஐஸ்கிரீம் குளிர்ச்சியான பதார்த்தம் என்பதால் அது நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் என்று பொதுவாக சொல்லப்படுகிறது. அதேபோல் அதில்  கலப்படம் செய்யப்படும் பொருட்கள் உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் தன்மையிலானவை.

ஐஸ் கிரீமில் பலவிதமான ரசாயனங்கள் சேர்க்கப்படுகிறது. அவைதான்  நமக்கு பல நோய்கள் வரவும் காரணமாகிறது.  ஐஸ்கிரீம் உருகாமல் இருக்கவும், பால் கெடாமல் இருக்கவும்,  செயற்கை நிறமிகளுக்காகவும் அதிக சுவையூட்டவும் பல ரசாயனங்கள் கலக்கப்படுகிறது. ஒரு சிலர் ஐஸ்கிரீமில் சேர்க்கப்படும் முட்டைக்கு பதிலாக பெயிண்ட் நீக்க பயன்படுத்தப்படும் டை எத்தில் போன்ற ரசாயனங்களைச் சேர்க்கின்றனர். இதனால் சிறுநீரகப்பை மற்றும் கல்லீரல் பாதிப்புக்கள் ஏற்படலாம்.

ஐஸ்கிரீம் என்பது பாலை நன்றாக காய்ச்சி அதில் தேவையான ஃப்ளேவர்களை சேர்த்து செய்யப்படுகிறது. ஆனால் சிலர், டெசர்ட் பாமாயில், வனஸ்பதி போன்ற கொழுப்புச்சத்து அதிகம் உள்ள எண்ணெய்களையும், சர்க்கரை, கலர்ஸ், கம் போன்றவற்றைக் கொண்டும் செய்கின்றனர்.  இதைச் சாப்பிடும் குழந்தைகள் அதிக உடல் எடை மற்றும் சர்க்கரை நோய் போன்றவற்றால் பாதிக்கப்படுவார்கள் .

குளிர்ச்சியான பொருளை நாம் சாப்பிடும் போது நமது மூளை 10 விநாடிகள் ஃப்ரீஸ் ஆகிவிடும். அது மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்ப 20 நிமிடங்கள் ஆகும்.  இதனால் பெரிய பாதிப்பு இல்லை என்றாலும் இந்த ஐஸ்கிரீமுக்கு மூளையின் செயல்பாட்டை நிறுத்தும் திறனும் உள்ளது. தினமும் ஒரு ஐஸ்கிரீம் எடுத்துக் கொண்டால் மது அருந்துவதற்கு சமம் என பல மருத்துவர்கள் கூறுகின்றனர். 

மேலும், சுவைக்காக ஐஸ்கிரீமில் சேர்க்கப்படும் சர்க்கரை, பல்வேறு நோய்களுக்கு காரணமாக அமைகிறது. இதிலுள்ள கொழுப்புப் பொருட்களின் விளைவாக, நம் உடலிலும் கொழுப்புகள் அதிகரித்து விடும் அபாயமும் உள்ளது. இதன் காரணமாக, ரத்த நாளங்கள் சுருங்கி விடுவதுடன் சீரான ரத்த ஓட்டமும் தடைபட்டு நோய்கள் தாக்கும் அபாயமும் உள்ளது.

குறிப்பாக, ரத்த அழுத்தம், மாரடைப்பு, தசைகளின் வலிமை குறைவு மற்றும் நீரிழிவு நோய் போன்ற பல நோய்களுக்கு வழிவகுத்து விடும் என்பதால் ஐஸ்கிரீம் சாப்பிடுவது உடல் நலத்திற்கு அவ்வளவு நல்லது அல்ல என்றே மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

இதையும் வாசிக்கலாமே...

அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு!

அடுத்த அதிர்ச்சி...  சிவகாசியில் மற்றொரு பட்டாசு ஆலையில் வெடிவிபத்து!

கனமழை: கரை புரண்டு ஓடும் வெள்ளத்தால் 50 பேர் பலி!

உக்ரைனுக்கு மேலும் 400 மில்லியன் டாலர் ராணுவ உதவி... அள்ளி வழங்கும் அமெரிக்கா!

மனைவி நடத்தையில் சந்தேகம்... 2 குழந்தைகளைக் கொன்று விட்டு கணவனும் தற்கொலை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in