உக்ரைன் ராணுவத்தினர்
உக்ரைன் ராணுவத்தினர்

உக்ரைனுக்கு மேலும் 400 மில்லியன் டாலர் ராணுவ உதவி... அள்ளி வழங்கும் அமெரிக்கா!

ரஷ்யா - உக்ரைன்  இடையேயான போரில் உக்ரைனுக்கு மேலும் 400 மில்லியன் டாலர்கள் ராணுவ உதவி வழங்குவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. 

உக்ரைன் மீது ரஷ்ய தாக்குதல்
உக்ரைன் மீது ரஷ்ய தாக்குதல்

உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 800 நாட்களைத் தாண்டியும் தொடர்ந்து  நீடித்து வருகிறது. இந்தப் போரில் இருதரப்பிலும் ஆயிரக்ணக்கான வீரர்கள் உயிரிழந்துள்ளனர். அப்பாவி பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளனர். பலகோடி மதிப்பிலான பொருள்கள் நாசம் அடைந்துள்ளன.

இந்த போரில் உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன. அதன் உதவியால் உக்ரைன் ரஷ்யாவின் கடும் தாக்குதலை சமாளித்து வருகிறது.  இரு நாடுகளுக்கு இடையேயான போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்துவருகின்றன. ஆனால்  அமைதிப் பேச்சு வார்த்தைக்கு இரு நாடுகளும் ஒப்புக்கொள்ளாததால் தொடர்ந்து போர் நீடித்து வருகிறது. இந்நிலையில், உக்ரைனுக்கு மேலும் 400 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஆயுத உதவிகளை வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. 

போர் பாதிப்பு
போர் பாதிப்பு

இதில் ராணுவ டாங்கிகள், ஏவுகணைகள் உட்பட அதிநவீன ஆயுதங்கள் பலவும் உக்ரைனுக்கு வழங்கப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. தற்போது அறிவிக்கப்ப்ட்டுள்ள ராணுவ உதவிகளையும் சேர்த்து ரஷியாவுடனான போர் தொடங்கியது முதல்  உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கிய ஆயுத உதவி 50.6 பில்லியன் டாலரை எட்டியுள்ளது. அமெரிக்கா அளித்து வரும் இத்தகைய ஆயுத உதவிகள் உள்ளிட்டவற்றின் காரணமாகவே ரஷ்யாவின் தொடர் தாக்குதலை உக்ரைனால் சமாளித்து தாக்குப்பிடிக்க முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in