ஆப்கானிஸ்தானில் கனமழை: கரை புரண்டு ஓடும் வெள்ளத்தால் 50 பேர் பலி!

ஆப்கானிஸ்தானில் சாலைகளில் வெள்ளம்
ஆப்கானிஸ்தானில் சாலைகளில் வெள்ளம்

ஆப்கானிஸ்தானில் பெய்த கனமழையால் ஏற்பட்ட  வெள்ளத்தில் சிக்கி இதுவரை 50 பேர் உயிரிழந்தனர். 

ஆப்கானிஸ்தான் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அந்நாட்டின் தலைநகர் காபூல், பஹ்லன் மாகாணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடைவிடாமல் கனமழை கொட்டித்தீர்த்தது.

இந்த கனமழையால் பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆற்றங்கரைகள் ஓரமுள்ள பல நகரங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. அப்பகுதிகளில் சாலை போக்குவரத்து முற்றிலுமாக  பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நூற்றுக்கணக்கானவர்கள்  தங்கள் உடமைகளை இழந்துள்ளனர்.  

இந்நிலையில் ஆப்கன் அரசு  கனமழை மற்றும் வெள்ளத்தால் சிக்கியுள்ளவர்களை நீக்கும் பணியைத் தொடர்ந்து செய்து வருகிறது. தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் வேட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பல ஆயிரக்கணக்கானவர்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். ஆறுகளின் ஓரம் இருந்தவர்கள் முற்றிலுமாக வெளியேற்றப்பட்டு விட்டதால் அதிக அளவிலான உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளதாகவும்,  பலர் படுகாயமடைந்துள்ளதாகவும்,  ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்யும் தலிபான் அரசு தெரிவித்துள்ளது. காயமடைந்த மற்றும் பாதிப்புக்கு உள்ளானவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு உரிய சிகிச்சை மற்றும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தலிபான் அரசு தெரிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in