
கேரளா மாநிலம் கன்னூரில் உள்ள பிணவறை வாசலில் தன் உரிமையாளர் வருவார் என்ற நம்பிக்கையுடன் நாய் ஒன்று காத்திருக்கும் காட்சிகள் இணையத்தில் பகிரப்பட்டு காண்போரின் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது.
கண்ணூரில் உள்ள அரசு மருத்துவமனையில் இருக்கும் பிணவறைக்கு முன்பாக தனது உரிமையாளர் திரும்பி வருவார் என்று நான்கு மாதங்களாக ஒரு நாய் மிகவும் நம்பிக்கையுடன் காத்திருக்கிறது.
சவக்கிடங்கு வாசலுக்குப் பக்கத்தில் வந்து நிற்கும் அந்த நாய் அங்கேயே இருந்து யாராவது போடும் சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு படுத்து தூங்கும். அதற்குக் காரணம் தனது உரிமையாளர் உள்ளே இருப்பதாக அந்த நாய் நம்பிக் கொண்டிருக்கிறது.
கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு ஒரு நோயாளி மருத்துவமனைக்கு வந்துள்ளார். நோயாளியுடன் இந்த நாயும் பின்னால் வந்துள்ளது. நோயாளி சிகிச்சை பலனின்றி இறந்தார். அதையடுத்து அவரை பிணவறைக்கு கொண்டு சென்றனர். அதனை அந்த நாய் பார்த்துள்ளது. அதனால் அவர் உள்ளேதான் இருக்கிறார் என்று அது நம்புகிறது. அவர் வருவார் என்று அங்கேயே காத்திருக்கிறது.
இதை கவனித்த யாரோ ஒருவர் இந்த நாயின் காத்திருப்பை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். இதனைக் கண்ட வலைதள வாசிகள் நாயின் பாசத்தை குறித்து நெகிழ்ச்சியுடன் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
பரபரப்பு… காஞ்சிபுரத்தில் அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல்!
கணவர் மிரட்டுகிறார்... காவல்துறையில் முன்னாள் அமைச்சர் சந்திர பிரியங்கா புகார்!
பத்து தொகுதிகள்... பலிக்குமா பாஜக போடும் கணக்கு?
ஆதிக்கம் செலுத்தப்போவது யார்? இந்தியா – தென்னாப்பிரிக்கா இன்று மோதல்!