அசத்தல்... தஞ்சாவூர், நெய்வேலியில் இருந்து சென்னைக்கு விமான சேவை!

 ஏர் டாக்ஸி நிறுவன விமானம்
ஏர் டாக்ஸி நிறுவன விமானம்

தஞ்சாவூர், நெய்வேலியில் இருந்து சென்னைக்கு விமான சேவை அடுத்த மாதம் தொடங்கப்படும் என ஏர் டாக்ஸி நிறுவனம் அறிவித்துள்ளது.

 ஏர் டாக்ஸி நிறுவன விமானம்
ஏர் டாக்ஸி நிறுவன விமானம்

தஞ்சாவூர் விமானப்படை தளத்தில் இருந்து சென்னை, பெங்களூருக்குப் பயணிகள் விமான சேவை அடுத்த மாதம் தொடங்கப்படும் என்று ஹரியாணா மாநிலம் குர்கானில் இயங்கி வரும் ஏர் டாக்ஸி நிறுவனம் அறிவித்துள்ளது.

சிறுநகரங்களை இணைக்கும் உதான் திட்டத்தின் கீழ் தஞ்சையில் இருந்து முதற்கட்டமாக 20 இருக்கைகளுடன் விமான சேவை தொடங்கப்படுகிறது. 1990-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட தஞ்சை – சென்னை விமான சேவை பயணிகள் வருகையின்றி நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில், அடுத்த மாதம் தஞ்சையில் விமான சேவை தொடங்கப்படுகிறது. ஓடுபாதை உட்பட அனைத்து அம்சங்களும் தயார் நிலையில் உள்ளன என கூறப்படுகிறது. இந்த சேவை மூலம் சாமானியர்கள் முதல் தொழிலதிபர்கள் வரை அனைத்து தரப்பினரும் பயண்பெறலாம்.

இதுபோன்று உதான் திட்டத்தில் நெய்வேலியில் இருந்தும் சென்னைக்கு சிறுரக விமானம் சேவையும் அடுத்த மாதம் முதல் தொடங்கப்பட உள்ளது. என்எல்சியில் இருக்கும் விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் இயக்கப்பட உள்ளது. இது செயல்பட்டு வந்தால் பெரும் வளர்ச்சி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நெய்வேலியில் விமான நிலையத்தில் ஓடுபாதை உட்பட அனைத்து அம்சங்களும் தயார் நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், உதான் திட்டத்தில் வேலூரில் ரூ.65 கோடியில் சிறிய விமான நிலையம் கட்டப்பட்டு தயாராக உள்ளது. ஆனால், சிவில் போக்குவரத்து விமான இயக்குநரகத்தின் அனுமதிக்கு காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in