தேசிய கீதத்தை அவமானப்படுத்திய மன்சூர் அலிகான்... வெடிக்கும் அடுத்த சர்ச்சை!

மன்சூர் அலிகான்
மன்சூர் அலிகான்

நடிகர் மன்சூர் அலிகான் தேசிய கீதத்தை அவமதித்துள்ளதாக அடுத்த சர்ச்சை வெடித்துள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

நடிகை த்ரிஷா குறித்து அவதூறு பரப்பும் விதமாக மன்சூர் அலிகான் பேசியது சர்ச்சைக்குள்ளானது. இதுகுறித்து அவர் இன்று நடத்திய பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்றும் மன்னிப்புக் கேட்க மாட்டேன் என்றும் பேசினார். மேலும், தனக்கு கண்டனம் தெரிவித்த நடிகர் சங்கத்துக்கும் அவர் எதிர்ப்புத் தெரிவித்ததோடு, நடிகை த்ரிஷாவுடன் படங்கள் இணைந்து நடிப்பேன் என்றும் கூறினார்.

பத்திரிகையாளர்கள் சந்திப்பின் இறுதியில் தேசிய கீதத்தைப் பாடினார் மன்சூர் அலிகான். அப்போது, அவர் எழுந்து நின்று பாடினாலும், கையை உயர்த்தியபடியும் அங்கும் இங்கும் ஆடியபடியும் தேசிய கீதத்தைப் பாடினார். இதற்குதான் பத்திரிகையாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். தேசிய கீதத்தை அவமரியாதை செய்யும்படி நீங்கள் பாடி இருக்கிறீர்கள் என அவர்கள் கேள்வி எழுப்பியதும் மன்சூர் அலிகான் பத்திரிகையாளர்களிடம், ‘நான் எழுந்து நின்றுதான் பாடினேன். நீங்கள்தான் தப்பாக கேள்வி கேட்கிறீர்கள்’ என விவாதம் செய்து கொண்டிருக்க மன்சூர் அலிகானுக்கு ஜெயில் உறுதி என நெட்டிசன்கள் இந்த வீடியோவைப் பகிர்ந்து வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...


மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது... 4 மணி நேரம் அவகாசம் தர்றேன்... நடிகர் சங்கத்தை எச்சரித்த மன்சூர் அலிகான்!

உத்தராகண்ட் சுரங்க விபத்து; 41 தொழிலாளர்களின் நிலை என்ன? வெளியானது வீடியோ

பரபரப்பு.. வைரமுத்துவை மகளிர் ஆணையம் விசாரிக்க வேண்டும்... ஹெச்.ராஜா வலியுறுத்தல்!

இறப்புக்கு முன் நடிகர் மாரிமுத்து வெளியிட்ட வீடியோ... ரசிகர்கள் உருக்கம்!

ரூ.1,760 கோடி பணம், மதுபானம் பறிமுதல்! தேர்தல் ஆணையம் அதிரடி

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in