மன்சூர் அலிகான் தப்புன்னா... ரஜினி பேசுனதும் தப்பு தான்... பிஸ்மி காட்டம்!

ரஜினிகாந்த்-பிஸ்மி
ரஜினிகாந்த்-பிஸ்மி

த்ரிஷா விவகாரத்தில் மன்சூரை கட்டம் கட்டி கேள்வி கேட்பவர்கள் ஏன் ரஜினிகாந்த்தை அப்படி கேள்வி கேட்கவில்லை என பத்திரிகையாளர் பிஸ்மி கேள்வி எழுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை த்ரிஷா குறித்து அவதூறாக பேசியதற்கு மன்சூர் அலிகானுக்கு திரைத்துறையினர் தங்களது கண்டனத்தைப் பதிவு செய்து வருகின்றனர். மேலும், ரசிகர்களும் மன்சூர் அலிகான் செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இந்த நிலையில், இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த மன்சூர் தான் தவறாக எதுவும் பேசவில்லை எனவும் மன்னிப்பு கேட்க முடியாது என்றும் கூறினார். மேலும், தான் நடிகைகளை பாராட்டி பேசினேன் எனவும் கூறியவர் தனக்கு எதிர்ப்பு தெரிவித்த நடிகர் சங்கத்திற்கு கண்டனத்தையும் பதிவு செய்தார்.

மன்சூர் அலிகான்
மன்சூர் அலிகான்

இந்த நிலையில், மன்சூரை கேள்வி கேட்பவர்கள் இதேபோன்று பேசிய ரஜினியை ஏன் கேள்வி கேட்கவில்லை என பத்திரிகையாளர் பிஸ்மி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் பேட்டி ஒன்றில் பேசியிருப்பதாவது, “ஜெயிலர் பட விழாவில் கிட்டத்தட்ட மன்சூர் அலிகான் பேசிய சாயலில் நடிகர் ரஜினிகாந்த்தும் பேசி இருந்தார். ’தமன்னா ’ஜெயிலர்’ படத்தில் நடிக்கிறாங்க. அதனால நான் ஆர்வமா வந்தேன். ஆனா கடைசியில என்னை அவங்க கூட ஆடவே விடல’ என ரஜினிகாந்த் பேசியது தவறான எண்ணத்தில்தான்.

பத்திரிகையாளர் பிஸ்மி
பத்திரிகையாளர் பிஸ்மி

அது ரஜினிகாந்தாக இருந்தால் என்ன? மன்சூர் அலிகான் ஆக இருந்தால் என்ன? உங்க மனசுக்குள்ள இந்த மாதிரி பெண்கள் குறித்து கேவலமான எண்ணம் இருக்கிறது என வெளிப்படுத்தும் குணம் தான் அது. அதனால் இது போன்ற பேச்சுகளை யாரும் எந்த காலத்திலும் பேசக்கூடாது " எனக் காட்டமாக பேசியுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...


மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது... 4 மணி நேரம் அவகாசம் தர்றேன்... நடிகர் சங்கத்தை எச்சரித்த மன்சூர் அலிகான்!

உத்தராகண்ட் சுரங்க விபத்து; 41 தொழிலாளர்களின் நிலை என்ன? வெளியானது வீடியோ

பரபரப்பு.. வைரமுத்துவை மகளிர் ஆணையம் விசாரிக்க வேண்டும்... ஹெச்.ராஜா வலியுறுத்தல்!

இறப்புக்கு முன் நடிகர் மாரிமுத்து வெளியிட்ட வீடியோ... ரசிகர்கள் உருக்கம்!

ரூ.1,760 கோடி பணம், மதுபானம் பறிமுதல்! தேர்தல் ஆணையம் அதிரடி

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in