கூல் சுரேஷ்- பிரதீப் இடையே சண்டை
கூல் சுரேஷ்- பிரதீப் இடையே சண்டை

செருப்பால் அடிப்பேன்... கூல் சுரேஷ்- பிரதீப் இடையே முற்றிய சண்டை... எல்லை மீறும் வார்த்தைகள்!

செருப்பால் அடிப்பேன் என பிக் பாஸ் போட்டியாளர்கள் சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வைல்ட் கார்டு போட்டியாளர்கள் உள்ளே நுழைந்தவுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி பரபரப்பாகப் போய்க் கொண்டிருக்கிறது. வந்த முதல் நாளே வைல்ட் கார்டு போட்டியாளர்களை சுமால் பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைத்தனர் பிக் பாஸ் போட்டியாளர்கள். இந்த நிலையில், பிரதீப்- கூல் சுரேஷ் இடையே கடுமையான வார்த்தை மோதல் ஏற்பட்டிருக்கிறது.

காலையில் வெளியான முதல் புரோமோவிலேயே பிரதீப் மரியாதைக் குறைவாக நடத்துவதாகச் சொல்லி கூல் சுரேஷ் பெட்டி படுக்கையுடன் வீட்டை விட்டு வெளியேறும்படி காட்டப்பட்டு இருந்தது.

அதைத் தொடர்ந்து, பிரதீப்- கூல் சுரேஷூக்கு இடையில் வார்த்தைப் போர் முற்றி ‘சில்ற பையன், செருப்பால் அடிப்பேன், வாடா போடா’ என்ற ரீதியில் பிரதீப் கூல் சுரேஷிடம் பேசும்படியாக இந்தப் புரோமோ வந்திருக்கிறது.

பிரதீப் இப்படி பேசியதற்கு மன்னிப்பு கேட்கச் சொல்லி சக போட்டியாளர்கள் சொல்ல, ‘அதெல்லாம் முடியாது’ எனத் தெனாவெட்டாக பதில் சொல்கிறார் பிரதீப். ஏற்கெனவே, இதுபோல பேசி விஜய் வர்மா இந்த சீசனில் யெல்லோ கார்டு வார்னிங் வாங்கி இருந்தார். பிரதீப்பும் கமலிடம் இருந்து எச்சரிக்கை வாங்கிய பின்பும் இவ்வாறு பேசியிருப்பது நிகழ்ச்சியில் பரபரப்பைக் கூட்டியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in