கடலூரில் பரபரப்பு... ஒரே நேரத்தில் 300-க்கும் மேற்பட்ட வீடுகளில் போலீஸார் சோதனை!

தீவிர தேடுதலில் போலீஸார்
தீவிர தேடுதலில் போலீஸார்
Updated on
1 min read

தமிழக டிஜிபியின் உத்தரவை அடுத்து கடலூரில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளனவா என 300-க்கும் மேற்பட்ட வீடுகளில் போலீஸார் அதிரடியாக சோதனை மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

போலீஸ் சோதனை
போலீஸ் சோதனை

தமிழகம் முழுவதும் கொலைக் குற்றவாளிகள் மற்றும் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளின் வீடுகளில் சோதனை நடத்த வேண்டுமென தமிழக டிஜிபி அண்மையில் உத்தரவிட்டிருந்தார். இதன் அடிப்படையில் கடலூர் மாவட்டம் முழுவதும் 300-க்கும் மேற்பட்ட வீடுகளில் போலீஸார் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் மற்றும் கொலை வழக்கு நிலுவையில் உள்ள வீடுகளில் ஏதேனும் ஆயுதங்கள் பதுக்கப்பட்டுள்ளதா என்ற கோணத்தில் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது.

தீவிர சோதனையில் போலீஸார்
தீவிர சோதனையில் போலீஸார்

கடலூர் தாழங்குடா மற்றும் தேவனாம்பட்டினம் பகுதியில் 40 வீடுகளில் போலீஸார் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.இதேபோல் மாவட்டம் முழுவதும் 300-க்கும் மேற்பட்ட வீடுகளில் இந்த சோதனையானது காவல் துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

அதிர்ச்சி... திமுக பிரமுகர் ஓட ஓட விரட்டி கொலை!

பகீர்... 81 கோடி இந்தியர்களின் ஆதார் தரவுகள் விற்பனை...  சிபிஐ விசாரணை!

இன்றே கடைசி தேதி... 2250 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

மைதானத்தில் வீராங்கனைக்கு முத்தமிட்ட விவகாரம்... லூயிஸுக்கு 3 ஆண்டுகள் தடை!

பரபரப்பு… பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in