அதிர்ச்சி... மனைவி தலையில் அம்மிக்கல்லைப் போட்டுக் கொன்ற கணவன்... போலீஸில் சரண்!

ராமர்
ராமர்

தனது பேச்சைக் கேட்காமல் இறப்பிற்கு சென்று வந்த மனைவியின் தலையில் அம்மிக்கல்லை தூக்கிப் போட்டு கணவன் கொலை செய்துள்ள சம்பவம் சின்னசேலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், நாகுப்பம் கிழக்கு காட்டுக்கொட்டகையைச் சேர்ந்தவர் ராமர் (55). கூலித்தொழிலாளி. இவரது மனைவி சின்னப்பிள்ளை(44). இவர்களுக்கு கார்த்திக் ரமேஷ் என்ற மகன்களும், அம்சவள்ளி என்ற மகளும் உள்ளனர்.

இவர்களுக்கு திருமணமாகி விட்டது. மாமியார் குடும்பத்தினருடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக, பல ஆண்டுகளாக அவரது வீட்டு சுப, துக்க நிகழ்ச்சிகளுக்கு ராமர் குடும்பத்தினர் செல்லாமல் இருந்து வந்தனர். இந்நிலையில், மாமியார் செல்லம்மாள், 17-ம் தேதி நல்லாத்தூரில் இறந்து விட்டார். அவரது இறப்புக்கு செல்லக் கூடாது என, மனைவியிடம் ராமர் கண்டிப்புடன் கூறினார். 

கொலை
கொலை

ஆனால்,  அதை அவரது மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர் கேட்கவில்லை. மகன் கார்த்திக், மகள் அம்சவள்ளி ஆகியோருடன் சின்னப்பிள்ளை, தன் தாயின் இறுதிச்சடங்கில் பங்கேற்றார். இதனால் கோபமடைந்த ராமர், சில தினங்களாக மனைவியுடன் பேசாமலும், வீட்டில் சாப்பிடாமலும் இருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம், தாயின் காரியத்தில் பங்கேற்க, சின்னப்பிள்ளையும், அவரது மகளும் சென்றனர்.

காரியம் முடிந்த பின் நேற்று  வீட்டிற்கு திரும்பிய சின்னப்பிள்ளை வீட்டுத்  திண்ணையில் படுத்திருந்தார். இரவு, 9 மணி அளவில் அங்கு வந்த ராமர்,  தூங்கிக் கொண்டிருந்த மனைவியின் தலையில்  அம்மிக்கல்லால் தாக்கினார். இதில், அவர் சம்பவ இடத்திலேயே  தலை நசுங்கி உயிரிழந்தார்.  மனைவி உயிரிழந்ததை அடுத்து நேராக  சின்னசேலம் காவல் நிலையத்திற்கு சென்ற ராமர், தனது மனைவியைக் கொலை செய்து விட்டதாக கூறி சரணடைந்தார். 

அவரை கைது செய்த சின்னசேலம் போலீஸார், சின்னப்பிள்ளையின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து ராமரிடம் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

அதிர்ச்சி... திமுக பிரமுகர் ஓட ஓட விரட்டி கொலை!

பகீர்... 81 கோடி இந்தியர்களின் ஆதார் தரவுகள் விற்பனை...  சிபிஐ விசாரணை!

இன்றே கடைசி தேதி... 2250 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

மைதானத்தில் வீராங்கனைக்கு முத்தமிட்ட விவகாரம்... லூயிஸுக்கு 3 ஆண்டுகள் தடை!

பரபரப்பு… பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in