பாரில் நடனமாடிய பெண்களுடன் தகராறு... தட்டிக் கேட்டவருக்கு கத்திக்குத்து... 'டெரர்' வாலிபரிடம் விசாரணை

காயமடைந்த ஹெக்டர்  சாலமன்
காயமடைந்த ஹெக்டர் சாலமன்
Updated on
2 min read

சென்னையில் மது பாரில் நடனமாடிய பெண்களுடன் தகராறு செய்ததைத் தட்டிக் கேட்ட வாலிபர் கத்தியால் குத்தப்பட்டார். அவரைக் கத்தியால் குத்தயவர் துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் இஸ்டாகிராம் பக்கத்தில் படங்களை பதிவிட்டுள்ளதால் அதுகுறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் ஹெக்டர் சாலமன்(28). இவரது உறவினர்களான கார்த்திக் குமார், துனுதீன் மற்றும் பெண் நண்பர்களுடன் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பார்க் எலான்சா ஓட்டல் பாரில் மது அருந்தியதாக தெரிகிறது.

காயமடைந்த ஹெக்டர்  சாலமன்
காயமடைந்த ஹெக்டர் சாலமன்

அப்போது அவர்களுடன் வந்த இரண்டு பெண்கள் பாரில் நடனம் ஆடிய போது அங்கிருந்த சிலர் நடனமாடிய பெண்கள் மீது இடித்ததாக கூறப்படுகிறது. இதனால் இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது .

இதன் பின்னர் ஹெக்டர் சாலமன் பாரில் இருந்து வெளியே வந்த போது அவரிடம் தகராறில் ஈடுபட்ட குகன் என்பவர் தனது நண்பர்களும் சேர்ந்து அவரை முதுகில் கத்தியால் குத்தி விட்டு தப்பிச் சென்றனர். இதனால் காயமடைந்த சாலமனை அவருடன் வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

தாக்குதல் நடத்திய குகன் துப்பாக்கியோடு
தாக்குதல் நடத்திய குகன் துப்பாக்கியோடு
தாக்குதல் நடத்திய குகன் வாளோடு.
தாக்குதல் நடத்திய குகன் வாளோடு.

தகவல் அறிந்து நுங்கம்பாக்கம் போலீஸார் சம்பவ இடத்திற்கு சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி வந்து விசாரணை நடத்தினர். பின்னர் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் இந்த மோதல் தொடர்பாக குகன் உள்பட 5 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in