அதிமுக தலைமையை யார் ஏற்றுக்கொண்டாலும் சேர்த்துக் கொள்வோம்... கே.பி.முனுசாமி பேச்சால் அதிமுகவில் குழப்பம்!

கேபி முனுசாமி, அதிமுக துணைப் பொதுச்செயலாளர்
கேபி முனுசாமி, அதிமுக துணைப் பொதுச்செயலாளர்

பாஜகவுக்கு அதிமுகவின் கதவுகள் மூடப்பட்டுவிட்டதாக அதிமுக மூத்த தலைவர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று சொல்லி இருந்தார். இந்த நிலையில், “மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையை யார் ஏற்றுக்கொண்டாலும் அவர்களை கூட்டணி சேர்த்துக்கொள்வோம்” என அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கேபி முனுசாமி மாறுபட்ட கருத்தைத் தெரிவித்துள்ளார்.

கேபி முனுசாமி, அதிமுக துணைப் பொதுச்செயலாளர்
கேபி முனுசாமி, அதிமுக துணைப் பொதுச்செயலாளர்

அதிமுக சார்பில் வரும் 11-ம் தேதி கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் சார்பில் பர்கூரில் மாற்றுக்கட்சிகளில் இருந்து விலகி அதிமுகவில் இணையும் விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்கிறார்.

இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று ஓசூரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி, அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி முனுசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

கேபி முனுசாமி, எடப்பாடி பழனிசாமி கட்சியினருடன்
கேபி முனுசாமி, எடப்பாடி பழனிசாமி கட்சியினருடன்

கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய கே.பி. முனுசாமி, “அதிமுகவில் இருந்து பாஜகவில் இணைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருமே கட்சியில் செயல்படாமல் இருந்தவர்கள். அதிமுக தலைமையில் தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் மெகா கூட்டணி உருவாகும். தமிழகத்தில் இருக்கிற அரசியல் கட்சிகளில் பெரிய கட்சி அதிமுக. நாங்கள் 30 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்திருக்கிறோம். 2 கோடி தொண்டர்களைக் கொண்ட பெரிய இயக்கம்.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த இயக்கத்தின் தலைமையில் தான் தேர்தல் கூட்டணி இருக்கும். அது தேசிய கட்சியாக இருந்தாலும், மாநில கட்சியாக இருந்தாலும் அதிமுக தலைமையில் வருகின்ற கட்சிகளை நாங்கள் கூட்டணிக்கு சேர்த்துக்கொள்வோம்” என தெரிவித்தார்.

பாஜகவுடன் கூட்டணி என்பது இன்றைக்கும் இல்லை என்றைக்கும் இல்லை என எடப்பாடி பழனிசாமி முன்பு அறிவித்திருந்த நிலையில் கே.பி.முனுசாமியின் இந்தப் பேச்சு அதிமுகவினர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

ரசிகர்கள் அதிர்ச்சி... விஜய் கட்சிக்கு TVK பெயர் கிடைக்காது!?

அதிகாரிகளை அலறவிடும் ஆட்சியர்... திருப்பத்தூர் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி!

ரூ.200 கோடி சம்பளத்தை உதறிய விஜய்... பிரபல தயாரிப்பாளர் பரபரப்பு!

உதகையில் பயங்கர நிலச்சரிவு; மண்ணில் புதைந்து 7 பேர் பலியான சோகம்

தாயைக் கொன்ற மகன்... வழக்கில் திடீர் திருப்பம்... கணவனே மனைவியைக் கொன்றது அம்பலம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in