உதகையில் பயங்கர நிலச்சரிவு; மண்ணில் புதைந்து 7 பேர் பலியான சோகம்

உதகையில் கட்டுமான பணியின் போது திடீர் நிலச்சரிவு
உதகையில் கட்டுமான பணியின் போது திடீர் நிலச்சரிவு

உதகை அருகே புதிய வீட்டின் கட்டுமான பணிகள் நடைபெற்ற போது மண் சரிவு ஏற்பட்டு கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த பெண்கள் உட்பட 7 பேர் மண்ணில் புதைந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் உதகையில் கட்டுமான பணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பல இடங்களில் கட்டுமான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உரிய அனுமதியின்றி நடைபெறும் இதுபோன்ற கட்டுமான பணிகளின் போது, அவ்வப்போது நிலச்சரிவுகள் ஏற்பட்டு பணியாளர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

நிலச்சரிவில் சிக்கி கட்டுமான பணியாளர்கள் 8 பேர் மண்ணில் புதைத்தனர்
நிலச்சரிவில் சிக்கி கட்டுமான பணியாளர்கள் 8 பேர் மண்ணில் புதைத்தனர்

இந்நிலையில், உதகை அடுத்த லவ்டேல் அருகே உள்ள காந்திநகர் பகுதியில் புதிய வீட்டிற்க்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தது. புதிய வீட்டுக்கான கழிவறை அமைக்கும் பணியில் 7 பெண்கள் உட்பட 8 கட்டுமான பணியாளர்கள் இன்று ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அருகில் கழிவுறைக்காக தோண்டப்பட்ட குழியின் அருகே மண் சரிவு ஏற்பட்டு பணியாளர்கள் மீது விழுந்தது. இதில் 8 பேரும் மண்ணில் உயிருடன் புதைந்தனர். இது குறித்து அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கும், காவல்துறையினருக்கும் தகவல் அளித்தனர்.

மீட்புப்படையினர் 8 பேரையும் மீட்டுள்ள நிலையில் 7 பேர் உயிரிழந்ததாக தகவல்
மீட்புப்படையினர் 8 பேரையும் மீட்டுள்ள நிலையில் 7 பேர் உயிரிழந்ததாக தகவல்

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், மண்சரிவில் சிக்கியிருந்த 8 பேரையும் மீட்டனர். இருப்பினும் இதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட மூன்று பேர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதில் இரண்டு இருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர். ஒருவரின் உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

வேறு யாரேனும் சிக்கியுள்ளனரா என தீவிர ஆய்வு
வேறு யாரேனும் சிக்கியுள்ளனரா என தீவிர ஆய்வு

உயிரிழந்தவர்களில், சங்கீதா (35), சகீலா (36), பாக்கியா (36), உமா (35), முத்துலட்சுமி (35) என்பவர்களின் தெரியவந்துள்ளது. உயிரிழந்த மற்றவர்கள் குறித்து காவல்துறையினர் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் உதகையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


வாக்காளர் பட்டியலில் இருந்து 1.66 கோடி பேர் நீக்கம்... உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்!

சட்லஜ் ஆற்றில் மீட்கப்பட்டது வெற்றி துரைசாமியின் உடல் பாகமா?: டிஎன்ஏ பரிசோதனை!

பாஜகவில் ஐக்கியமாகும் 18 அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள்... அண்ணாமலை அவசரமாக இன்று டெல்லி பயணம்!

கூட்டணிக்காக விடாமல் துரத்தும் அதிமுக, பாஜக... குழப்பத்தில் பாமக!

அணையப்போகும் விளக்கு பிரகாசமாகத் தான் எரியும்... அதிமுக மீது அண்ணாமலை பாய்ச்சல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in