200 கோடி சம்பளத்தை உதறிய விஜய்... தயாரிப்பாளர் கே.ராஜன் அதிரடி பேச்சு!

ராஜன்
ராஜன்

“200 கோடி ரூபாய் சம்பளத்தையே வேண்டாம் என்று சொல்லிவிட்டு அரசியலுக்கு வந்திருக்கும் நடிகர் விஜய் எம்ஜிஆர் செய்த தொண்டுகளில் 15 சதவீதத்தையாவது செய்ய வேண்டும்” என தயாரிப்பாளர் கே.ராஜன் அதிரடியாகப் பேசியுள்ளார். நேற்று சென்னையில் நடைபெற்ற ‘நினைவெல்லாம் நீயடா’ படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில்தான் கே.ராஜன் இப்படி பேசியுள்ளார்.

அந்த நிகழ்வில் பேசிய கே.ராஜன், “ 'நினைவெல்லாம் நீயடா' படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க ஒப்புக்கொண்டிருக்கும்போதே படம் எப்படி இருக்கும் என்பது பற்றி சொல்லத் தேவையில்லை. காதலின் நெருக்கத்தை சொல்வதற்கு பொருத்தமான டைட்டில் தான்.

இப்போது வரை சூப்பர் ஹீரோவாக இருக்கும் நடிகர் விஜய் ஒரு புதிய கட்சியைத் தொடங்கி இருக்கிறார். தமிழ் திரையுலகம் சார்பில் அவரை வாழ்த்துகிறேன்.

விஜய், எம்ஜிஆர்
விஜய், எம்ஜிஆர்

அவர் வெற்றி பெற வேண்டும் என்றால் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் செய்த தொண்டுகளில் 15 சதவீதமாவது செய்ய வேண்டும். மக்களிடம் இறங்கி வர வேண்டும். மேடையில் இருந்து கொண்டு புஸ்ஸி ஆனந்தை அறிக்கை விடச் சொன்னால் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். களத்தில் இறங்கி அவர் மக்களைச் சந்திக்க வேண்டும். 200 கோடி சம்பளத்தையே வேண்டாம் எனக் கூறி மக்களுக்காக இறங்கி இருக்கிறார் என்றால் உண்மையிலேயே அவர் நல்லது செய்வார் என நம்புவோம்” என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

வாக்காளர் பட்டியலில் இருந்து 1.66 கோடி பேர் நீக்கம்... உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்!

சட்லஜ் ஆற்றில் மீட்கப்பட்டது வெற்றி துரைசாமியின் உடல் பாகமா?: டிஎன்ஏ பரிசோதனை!

பாஜகவில் ஐக்கியமாகும் 18 அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள்... அண்ணாமலை அவசரமாக இன்று டெல்லி பயணம்!

கூட்டணிக்காக விடாமல் துரத்தும் அதிமுக, பாஜக... குழப்பத்தில் பாமக!

அணையப்போகும் விளக்கு பிரகாசமாகத் தான் எரியும்... அதிமுக மீது அண்ணாமலை பாய்ச்சல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in