ரசிகர்கள் அதிர்ச்சி... விஜய் கட்சிக்கு TVK பெயர் கிடைக்காது!?

வேல்முருகன்
வேல்முருகன்

அண்மையில் தமிழக வெற்றி கழகம் என்ற தனது புதிய அரசியல் கட்சியை ஆரம்பித்தார் நடிகர் விஜய். இதை முறைப்படி அவர் தேர்தல் ஆணையத்திலும் பதிவு செய்துவிட்ட நிலையில், “விஜயின் கட்சிக்கும் தங்களின் கட்சிக்கும் ஆங்கில சுருக்கெழுத்து பெயர் (டிவிகே) ஒரே மாதிரியாக இருப்பதால் விஜய் கட்சியின் பெயரை மாற்றச் சொல்லி ஆணையத்தில் கேட்போம்” என சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறார் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன்.

விஜய்
விஜய்

இது தொடர்பாக வேல்முருகன் அளித்திருக்கும் பேட்டியில், “அரசியக் கட்சியை தொடங்கி இருக்கும் நடிகர் விஜய்க்கு வாழ்த்துகள். சினிமாவில் இருந்து வரக்கூடிய ஒருவரை உடனே முதலமைச்சராக்க வேண்டுமா என்ற கேள்வியை தமிழக மக்கள் கேட்டுக் கொள்ள வேண்டும். ஏனெனில், மக்களுக்குப் பணி செய்ய வேண்டியதற்கான கால அவகாசத்தை அவர் எடுத்துக் கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் பல்வேறு பிரச்சினைகள் நடந்து கொண்டிருக்கிறது. அதில் எல்லாம் விஜயின் நிலைப்பாடு என்ன என்று நமக்குத் தெரிய வேண்டும். அதன் பிறகே, அவருக்கு வாக்களிப்பது குறித்து மக்கள் முடிவெடுக்க வேண்டும். மற்றபடி அவர் அரசியலுக்கே தகுதி இல்லாதவர் என்று சொல்ல முடியாது” என்று சொல்லி இருக்கிறார்.

விஜய்
விஜய்

அத்துடன், “தமிழக வாழ்வுரிமை கட்சி என்ற எங்களது கட்சிப் பெயரின் ஆங்கில சுருக்கம் டிவிகே தான். நடிகர் விஜயின் கட்சிக்கும் அதுவே தான் ஆங்கில சுருக்கமாக இருக்கும். தேர்தல் ஆணையத்தில் விஜய் தனது கட்சியை பதிவு செய்துவிட்டதாக சொல்லப்படுகிறது. அப்படியானால், இரண்டு கட்சிக்கு ஒரே பெயர் என்பது சாத்தியமில்லாதது.

ஆவணங்களைச் சரிபார்த்து விஜய் கட்சியின் ஆங்கில சுருக்கத்தில் கூடுதலாக ஒரு எழுத்தைச் சேர்க்கச் சொல்லி அவரை தேர்தல் ஆணையம் வலியுறுத்த வாய்ப்பு இருக்கிறது. அப்படி இல்லாத பட்சத்தில் நாங்கள் அதை வலியுறுத்தி ஆணையத்தில் மனு கொடுப்போம்” என்று சொல்லி இருக்கிறார்.

இதையும் வாசிக்கலாமே...

வாக்காளர் பட்டியலில் இருந்து 1.66 கோடி பேர் நீக்கம்... உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்!

சட்லஜ் ஆற்றில் மீட்கப்பட்டது வெற்றி துரைசாமியின் உடல் பாகமா?: டிஎன்ஏ பரிசோதனை!

பாஜகவில் ஐக்கியமாகும் 18 அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள்... அண்ணாமலை அவசரமாக இன்று டெல்லி பயணம்!

கூட்டணிக்காக விடாமல் துரத்தும் அதிமுக, பாஜக... குழப்பத்தில் பாமக!

அணையப்போகும் விளக்கு பிரகாசமாகத் தான் எரியும்... அதிமுக மீது அண்ணாமலை பாய்ச்சல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in