பாராமுகம் காட்டிய அரசு; மக்களே களமிறங்கி தூர்வாரிய குடிநீர் பொதுக்கிணறு!

குடிநீர் கிணறு தூர்வாரும் பணி
குடிநீர் கிணறு தூர்வாரும் பணி
Updated on
2 min read

அரியலூர் அருகே 10 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் பொதுக் கிணற்றை அரசு தூர்வார முன்வராததால், கிராம மக்களே தூர்வாரிய நிகழ்வு நடைபெற்றுள்ளது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சூரியமணல் கிராமம் அமைந்துள்ளது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த 70 ஆண்டுகளுக்கு முன்பு குடிநீர் பயன்பாட்டுக்காக வெட்டக்கிணறு என்று அழைக்கப்படும் பொதுக் கிணறு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதில் சூரியமணல், ஜெயங்கொண்டம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் குடிநீர் எடுத்து வந்துள்ளனர்.

குடிநீர் கிணறு தூர்வாரும் பணி
குடிநீர் கிணறு தூர்வாரும் பணி

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் இந்த கிணற்றிலிருந்து நீர் எடுப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் சைக்கிள்கள் மூலம் வந்து செல்வதை வாடிக்கையாக வைத்திருந்தனர். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக இந்த கிணறு தூர்வாரப்படாமல் இருந்தது. இதனால் ஊற்று நீர் சரியாக ஊற்றெடுக்க முடியாமல் சுகாதாரமின்றி தண்ணீர் கலங்கலாக இருந்து வந்துள்ளது. இதையடுத்து இந்த கிணற்றை தூர்வார வேண்டுமென அரசுக்கு பலமுறை அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குடிநீர் கிணறு தூர்வாரும் பணி
குடிநீர் கிணறு தூர்வாரும் பணி

ஆனால் அரசு நிர்வாகம் இதனை கண்டு கொள்ளாததால், தாங்களே இந்த கிணற்றை தூர் வாருவது என கிராம மக்கள் முடிவு செய்தனர். இதையடுத்து இந்த கிணற்றில் சாரம் அமைத்து பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தூர் வாரும் பணியில் ஈடுபட்டனர். இதனால் தற்போது நீர் ஊற்று அதிகரிக்க துவங்கி இருப்பதாக கிராம மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

கேன்ஸ் விழாவில் சிறந்த நடிகைக்கான விருது.. வரலாறு படைத்தார் இந்திய நடிகை!

நிறைமாத நிலவே வா... வா... நடிகை அமலபால் லேட்டஸ்ட் போட்டோஷூட்

ரூ. 640 கோடியில் மருமகளுக்குப் பரிசு... அசத்திய அம்பானி மனைவி!

சொகுசு ஓட்டலில் பிரதமர் மோடி தங்கியதில் ரூ.80 லட்சம் பில் பாக்கி... 18 சதவீத வட்டியுடன் செலுத்த எச்சரிக்கை!

ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகனுடன் மது விருந்து நடத்திய குற்றவாளி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in