ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகனுடன் மது விருந்து நடத்திய குற்றவாளி... வெளியானது அதிர்ச்சி புகைப்படம்!

ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியுடன் அருண்குமார்.
ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியுடன் அருண்குமார்.

பெங்களூரு பண்ணை வீட்டில் நடைபெற்ற மது, போதைப்பொருள் விருந்தில் முக்கிய குற்றவாளியான அருண்குமார், ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியுடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கர்நாடகா மாநிலம், பெங்களூரு புறநகர் பகுதியான ஹெப்பகோடியில் உள்ள பண்ணை வீட்டில், கடந்த 19-ம் தேதி இரவு மது விருந்து நடைபெற்றது. அங்கு போதைப் பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக கிடைத்த தகவலின்படி, மத்தியக் குற்றப்பிரிவு போலீஸார் சோதனை நடத்தினர்.

பண்ணை வீட்டில் நடந்த சோதனை
பண்ணை வீட்டில் நடந்த சோதனை

இந்த நிகழ்வில் மொத்தம் 103 பேர் பங்கேற்றுள்ளனர். பங்கேற்பாளர்களில் 73 ஆண்களும் 30 பெண்களும் அடங்குவர். இதில் தெலுங்கு நடிகர், நடிகைகள், மாடல் அழகிகள், ஐ.டி ஊழியர்கள் பங்கேற்றது தெரிய வந்தது. இந்த விருந்தில் நடிகைகள் ஹேமா, ஆஷிராய் ஆகியோர் பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. அத்துடன் விருந்தில் பங்கேற்றவர்கள் எம்டிஎம், கொக்கெய்ன் மற்றும் ஹைட்ரோ கஞ்சா போன்ற போதைப்பொருட்களைப் பயன்படுத்தியும் விசாரணையில் தெரியவந்தது.

நடிகைகள் ஹேமா, ஆஷி ராய்
நடிகைகள் ஹேமா, ஆஷி ராய்

இந்த விருந்தை ஹைதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபரான வாசுவின் பிறந்தநாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டது தெரிய வந்தது. இந்த நிகழ்வில் போதைப்பொருள் வியாபாரிகளும் கலந்து கொண்டுள்ளனர். இந்த விருந்தில் பிடிபட்ட 103 பேரின் ரத்த மாதிரிகளையும் சேகரித்து சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அதன் முடிவுகள் வெளியானதில் 86 பேர் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியானது. இந்த விருந்துக்கு ஏற்பாடு செய்த அமைப்பாளர் அருண் குமார், சித்திக், ரன்பீர், நாகபாபர் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

இதில் ஏ 2 குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள அருண்குமார் ஆந்திராவின் செல்வாக்கு மிக்க அரசியல்வாதிகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட அருண்குமார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

ஜெகன் மோகன் ரெட்டி
ஜெகன் மோகன் ரெட்டி

ஒய்எஸ்ஆர்பி கட்சி தலைவர்களுடன் தொடர்பில் உள்ள அருண்குமார், கோரமங்களாவில் உள்ள சொகுசு குடியிருப்பில் தங்கி பெங்களூருவில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். ரேவ் பார்ட்டியின் முக்கிய குற்றவாளியான வாசுவுடன் சேர்ந்து இந்த விருந்துக்கான ஏற்பாடுகளை அருண்குமார் செய்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில், மதுவிருந்து குறித்து தகவல் கிடைத்தும் நடவடிக்கை எடுக்காத கிரீஷ், நாராயண் சுவாமி, தேவராஜு ஆகிய மூன்று காவலர்களை இடைநீக்கம் செய்து மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் மல்லிகார்ஜுனா உத்தரவிட்டுள்ளார். மேலும், டிஎஸ்பி மோகன், இன்ஸ்பெக்டர் ஐ.என். ரெட்டி ஆகியோருக்கு மெமோ வழங்கப்பட்டுள்ளது காவல் துறை வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்... அடுத்த 3 மணி நேரத்தில் கொட்டப்போகிறது மழை!

டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு... குரூப் 2, 2ஏ பாடத்திட்டம் மாற்றம்!

மே 28 முதல் 60 நாட்களுக்கு 144 தடை உத்தரவு; காவல் துறை அதிரடி

தாமதமாகும் ரெமல் புயல்... கடல் கொந்தளிப்பால் மீனவர்களுக்கு எச்சரிக்கை!

சென்னையில் திடீர் கனமழை பெய்தால்? தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா முக்கிய தகவல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in