கேன்ஸ் திரைப்படவிழாவில் சிறந்த நடிகைக்கான விருது - வரலாறு படைத்தார் இந்திய நடிகை!

கேன்ஸ் திரைப்படவிழாவில் சிறந்த நடிகைக்கான விருது - வரலாறு படைத்தார் இந்திய நடிகை!

கேன்ஸ் திரைப்படவிழா 2024ல் நடிகை அனசுயா சிறந்த நடிகைக்கான விருது வென்றுள்ளார். இந்த செய்தி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

பிரான்ஸ் நாட்டில் வருடாவருடம் நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழா ரசிகர்களின் கவனம் ஈர்க்கத் தவறுவதில்லை. கடந்த மே 14-ம் தேதி தொடங்கிய கேன்ஸ் திரைப்பட விழா இன்றுடன் நிறைவு பெறுகிறது. இந்தத் திரைப்பட விழாவின் பல்வேறு பிரிவுகளில் போட்டியிட பல இந்தியத் திரைப்படங்கள் தேர்வாகி திரையிடப்பட்டது.

அனசுயா
அனசுயா

இதில் முதல் மற்றும் மூன்றாவது இடத்தை ‘சன்ஃபிளவர்ஸ்’ மற்றும் 'பன்னிஹுட்' என்ற குறும்படங்கள் லா சினிஃப் பிரிவில் பரிசுகள் தட்டிச் சென்றது. இதுமட்டுமல்லாது, ரசிகர்களுக்கு மற்றொரு ஸ்வீட் நியூஸாக கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட ‘ஷேம்லஸ்’ படத்தில் நடித்திருந்த இந்திய நடிகை அனசுயா சென்குப்தாவுக்கு சிறந்த நடிகைக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 77 வருடங்களாக நடந்து வரக்கூடிய கேன்ஸ் திரைப்படவிழாவில் இந்திய நடிகை ஒருவர் சிறந்த நடிகைக்கான விருது பெறுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வரலாற்று சாதனைக்காக அனசுயாவுக்கு பலரும் தங்கள் வாழ்த்துகளைச் சொல்லி வருகின்றனர்.

அனுசயா
அனுசயா

புரொடக்‌ஷன் டிசைனராகத் தனது கரியரைத் தொடங்கிய அனசுயா, சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார். இவர் நடித்துள்ள ‘ஷேம்லெஸ்’ திரைப்படம் மிகப்பெரும் வெளிச்சத்தைக் கொடுத்துள்ளது எனப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்... அடுத்த 3 மணி நேரத்தில் கொட்டப்போகிறது மழை!

டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு... குரூப் 2, 2ஏ பாடத்திட்டம் மாற்றம்!

மே 28 முதல் 60 நாட்களுக்கு 144 தடை உத்தரவு; காவல் துறை அதிரடி

தாமதமாகும் ரெமல் புயல்... கடல் கொந்தளிப்பால் மீனவர்களுக்கு எச்சரிக்கை!

சென்னையில் திடீர் கனமழை பெய்தால்? தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா முக்கிய தகவல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in