கொளுத்தும் வெயில்; தேனியில் வறண்டு போன திராட்சை தோட்டங்கள்... கவலையில் விவசாயிகள்!

பன்னீர் திராட்சை சாகுபடி (கோப்பு படம்)
பன்னீர் திராட்சை சாகுபடி (கோப்பு படம்)

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெப்பநிலை அதிகரித்துள்ளதால் கம்பம் - குமுளி தேசிய நெடுஞ்சாலையில் திராட்சைத் தோட்டங்கள் பசுமையை இழந்துவிட்டன. இதனால் தென்னிந்தியாவின் திராட்சை பள்ளத்தாக்கு தற்போது வறண்டு கிடக்கிறது.

கடந்த மாதம், வெப்ப அலை காரணமாக பூக்கள் கருகியதால் தமிழக திராட்சை விவசாயிகள் கடும் பாதிப்பை சந்தித்தனர். இதன் காரணமாக, தேனி மாவட்டத்தில் இந்த ஆண்டு திராட்சை விளைச்சலில் பெரும் பாதிப்பு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக ஒரு ஏக்கருக்கு 12 முதல் 15 டன் விளைச்சல் கிடைக்கும். இந்நிலையில் கடும் கோடை வெப்பத்தின் தாக்கம் காரணமாக, விவசாயிகள் இந்த பருவத்தில் 2 முதல் 3 டன்கள் விளைச்சலையே எதிர்நோக்குகிறார்கள். இது கிட்டத்தட்ட 80 % விளைச்சல் வீழ்ச்சியாகும்.

சுட்டெரிக்கும் வெயில்
சுட்டெரிக்கும் வெயில்

'மஸ்கட் ஹாம்பர்க்' என ஆங்கிலத்தில் சொல்லப்படும் பன்னீர் திராட்சையை அதிக அளவில் உற்பத்தி செய்யும் மையங்களில் ஒன்றாக தேனி கம்பம் பள்ளத்தாக்கு திகழ்கிறது. பன்னீர் திராட்சை விரைவாக வளர்வதால் விவசாயிகளிடையே ஆர்வமுடன் பயிரிடும் திராட்சை வகையாகும். மற்ற பழங்களைப் போலல்லாமல், இந்த வகை திராட்சை ஆண்டு முழுவதும் சந்தையில் கிடைக்கிறது.

தேனி மாவட்டம், ஓடைப்பட்டி பகுதி, பன்னீர்திராட்சை மட்டுமின்றி விதையில்லா திராட்சை வகைகளுக்கும் பிரபலமானது. விதையில்லா திராட்சை தமிழகத்தில் இந்த பகுதியில் மட்டுமே விளைவது குறிப்பிடத்தக்கது.

குறைந்த மகசூல் காரணமாக, இந்த ஆண்டு பெரும் இழப்பு ஏற்படும் என்று பன்னீர் திராட்சை மற்றும் விதையில்லா திராட்சை பயிரிடும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

பன்னீர் திராட்சை
பன்னீர் திராட்சை

இது தொடர்பாக பெரியார் - வைகை பாசன விவசாயிகள் சங்கத் தலைவரும், காமயம் திராட்சை விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளருமான பொன் கச்சி கண்ணன் கூறுகையில், “கடும் வெயில் காரணமாக இந்த ஆண்டு திராட்சை விவசாயிகளுக்கு பெரும் மகசூழ் இழப்பு ஏற்பட்டுள்ளது. நெல் மற்றும் கரும்பைப் போலவே, திராட்சைக்கும் பெரிய இழப்பைத் தடுக்க, கிலோவுக்கு ரூ.50 என்ற குறைந்தபட்ச ஆதரவு விலையை அரசு வழங்க வேண்டும். திராட்சை விவசாயிகளுக்கும் பயிர் இழப்பு நிவாரணம் வழங்க வேண்டும்.” என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு!

அடுத்த அதிர்ச்சி...  சிவகாசியில் மற்றொரு பட்டாசு ஆலையில் வெடிவிபத்து!

கனமழை: கரை புரண்டு ஓடும் வெள்ளத்தால் 50 பேர் பலி!

உக்ரைனுக்கு மேலும் 400 மில்லியன் டாலர் ராணுவ உதவி... அள்ளி வழங்கும் அமெரிக்கா!

மனைவி நடத்தையில் சந்தேகம்... 2 குழந்தைகளைக் கொன்று விட்டு கணவனும் தற்கொலை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in