அதிர்ச்சி... திடீரென பாலத்தில் கவிழ்ந்த கன்டெய்னர் லாரி: விழுப்புரம் அருகே பரபரப்பு!

மேம்பாலத்தில் கவிழ்ந்து கிடக்கும் லாரி.
மேம்பாலத்தில் கவிழ்ந்து கிடக்கும் லாரி.

விழுப்புரம் அருகே ஜானகிபுரம் மேம்பாலத்தில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

மீட்பு நடவடிக்கை
மீட்பு நடவடிக்கை

திருச்சியில் இருந்து பேப்பர் பண்டல்களை ஏற்றி கொண்டு சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி, இன்று அதிகாலையில் விழுப்புரம் ஜானகிபுரம் மேம்பாலத்தில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சாலையில் குறுகே லாரி கவிழ்ந்ததால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதும். இதனால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதனால் நூற்றுக் கணக்கான வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்கின்றன. இதற்கிடையே விபத்தில் சிக்கிய லாரி ஓட்டுநர் காயமடைந்த நிலையில், அந்தரத்தில் தொங்கினார். விபத்து குறித்து அறிந்த காவல் துறையினரும், மீட்பு படையினரும் விரைந்து வந்து விபத்தில் சிக்கிய லாரியை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து நிலவிய வாகன நெரிசலையும் சீர்படுத்தினர். முன்னதாக விபத்தில் சிக்கி காயமடைந்த லாரி ஓட்டுநர் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

தனது உடமைகளை இழந்த இளைஞர்
தனது உடமைகளை இழந்த இளைஞர்

இந்த நிலையில், ஜானகிபுரம் மேம்பாலத்தில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளான போது கோயம்புத்தூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு பேருந்தில் பயணித்த இளைஞர் ஒருவர் ஓட்டுநரைக் காப்பாற்றச் சென்றுள்ளார். இதன்பின் திரும்பி வந்து பார்த்த போது அவரது லேப்டாப், பணம், உடமைகள், ஆவணங்கள் என அனைத்தும் மாயமாகி இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அங்கிருந்த காவலர்களிடம் தெரிவித்த போது, புகார் கொடுங்க பாக்கலாம் என சொல்லி யுள்ளனர். இதனால் வேதனையடைந்த அந்த இளைஞர், ”லேப்டாப் கிடைக்கவில்லையென்றால் எனது வேலை போய்விடும்” என கூறியவாறு கண்கலங்கினார்.

இதையும் வாசிக்கலாமே...

“இரட்டை இலை எனக்கே கிடைக்கணும் முருகா'!... திருச்செந்தூரில் ஓபிஎஸ் மனமுருகி பிரார்த்தனை!

'குக் வித் கோமாளி' பாலா செய்த தரமான சம்பவம்... வைரலாகும் வீடியோ!

1 முதல் 9-ம் வகுப்பு வரை இறுதித்தேர்வு எப்போது? பள்ளிக் கல்வித்துறை முடிவு!

விதிமுறைகளை மீறி பிறந்தநாள் கொண்டாட்டம்... காங்கிரஸ் எம்எல்ஏ மீது வழக்கு!

நீரை சேமிக்கும் புதுமையான டெக்னிக்... வைரலாகும் ஆனந்த் மஹிந்திராவின் ட்விட்டர் வீடியோ!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in