'குக் வித் கோமாளி' பாலா செய்த தரமான சம்பவம்... வைரலாகும் வீடியோ!

பெட்ரோல் பங்க் ஊழியருககு பைக் பரிசளித்த பாலா
பெட்ரோல் பங்க் ஊழியருககு பைக் பரிசளித்த பாலா
Updated on
2 min read

பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் இளைஞருக்கு நடிகர் பாலா பைக்கை பரிசளித்துள்ள வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

ஆம்புலன்ஸ் வழங்கிய பாலா
ஆம்புலன்ஸ் வழங்கிய பாலா

விஜய் தொலைக்காட்சியின் ‘கலக்கப்போவது யாரு', ‘குக் வித் கோமாளி’ ஆகிய நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர் பாலா. தொலைக்காட்சியைத் தாண்டி சினிமாவில் பயணித்து வருவதுடன், நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் வலம் வருகிறார். அத்துடன் தன் உதவும் குணத்தால் பரவலாக தமிழகம் முழுவதும் உள்ள மக்களால் பாலா நன்கு அறியப்படுகிறார்.

தனது வருமானத்தின் பெரும் பங்கை பொதுமக்களின் நலனுக்காக பயன்படுத்துவதி வரும் பாலா, ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தை நடத்தி வருகிறார். தனது சொந்த செலவில் பல கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ்களையும், மாற்றுத்திறனாளிகளுக்கு இருசக்கர வாகனங்களையும் வழங்கி வருகிறார்.

பைக் பரிசளித்த பாலா
பைக் பரிசளித்த பாலா

இந்த நிலையில் பெட்ரோல் பங்கில் பணிபுரியும் இளைஞர் ஒருவரின் வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் அவருக்கு பைக்கை பரிசாக வழங்கியுள்ளார் பாலா. அந்த வீடியோவில் பெட்ரோல் நிரப்ப வந்தவரிடம், ஹெல்மெட்டில் இருந்த கேமரா எவ்வளவு என அந்த ஊழியர் கேட்டதற்கு 46 ஆயிரம் ரூபாய் என அந்த நபர் கூறுகிறார்.

அதற்கு சிரித்துக் கொண்டே பதிலளித்த பெட்ரோல் பங்க் ஊழியர், எங்கள் வீட்டில் பைக் வாங்குவதற்கு 10 ஆயிரம் ரூபாய் கேட்டால் செருப்பால் அடிப்பேன் என்று கூறினார்கள் என சிரித்துக் கொண்டே கூறினார். சிரித்தாலும் அவர் முகத்தின் ஓரத்தில் வருத்தம் தெரிந்தது.இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வந்தது.

இந்த வீடியோவைப் பார்த்த நடிகர் பாலா, இளைஞருக்கு பைக் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். அந்த இளைஞரிடமே சென்று பைக்கிற்கு பெட்ரோல் போட்டுவிட்டு சாவியை அவர் கையில் கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் பாலா.

இதுகுறித்து தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் பாலா பகிர்ந்துள்ளார். அதில், "இவரது வீடியோவை இன்ஸ்டாகிராமில் எதேச்சையாக பார்த்தேன். என்னால் என் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. வீடியோவில், என்னால் பைக் வாங்க முடியாது என்று கூறினார், ஆனால், அவருக்கு நான் ஒரு பைக்கை பரிசளிக்க முடியும் என என் மனம் சொன்னது. அதனால் என் தம்பிக்கு பைக்கை பரிசாக இந்த பைக்கைக் கொடுத்தேன். லவ் யூ தம்பி. ஏதோ என்னால் முடிஞ்சது” என்று பதிவிட்டுள்ளார். பாலாவின் இந்த உதவும் குணம் மீண்டும் தமிழகத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in