1 முதல் 9-ம் வகுப்பு வரை முன் கூட்டியே இறுதித்தேர்வு... பள்ளிக் கல்வித்துறை முடிவு!

பள்ளிக்கல்வி இயக்ககம்
பள்ளிக்கல்வி இயக்ககம்
Updated on
2 min read

மக்களவைத்தேர்தல் அறிவிக்கபட்டுள்ள நிலையில், ஒன்று முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதித் தேர்வுகளை முன்னதாகவே முடிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்
தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்

நாட்டில் வரும் ஏப்ரல் 19-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரை மக்களவைத்தேர்தல் நடைபெறவுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் முதற்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில், பள்ளி மாணவர்களுக்கான இறுதித் தேர்வுகளை விரைந்து முடிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

அந்த வகையில், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு, பிப்ரவரி 15ல் தொடங்கி, ஏப்ரல் 2-ல் முடிகிறது. 10-ம் வகுப்பு தேர்வு பிப்ரவரி 15-ல் தொடங்கி, இந்த மாதம், 13-ம் தேதியுடன் நிறைவு பெற்றது. ஐசிஎஸ்இ பாடத்திட்டத்தில், பிளஸ் 2-வுக்கு பிப்ரவரி 12-ல் பொதுத்தேர்வு தொடங்கி, ஏப்ரல் 2-ல் முடிகிறது. 10-ம் வகுப்புக்கு, பிப்ரவரி 21-ல் தேர்வு துவங்கி இந்த மாதம், 28ல் முடிகிறது.

இதேபோல் தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச், 1-ம் தேதி தொடங்கி, வரும், 22-ம் தேதியுடன் முடிகிறது. பிளஸ் 1 பொதுதேர்வு மார்ச், 4-ல் தொடங்கி, வரும், 25-ம் தேதியுடன் முடிகிறது. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு வரும், 26-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 8-ம் தேதியுடன் முடிகிறது.

தேர்வு எழுதும் மாணவர்கள்
தேர்வு எழுதும் மாணவர்கள்

இந்நிலையில், மக்களவை தேர்தல் தேதியை, இந்திய தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் அறிவித்தது. அதன்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக, 40 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடக்க உள்ளது. வாக்களிக்க பெரும்பாலும், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் வாக்குச்சாவடிகளாக செயல்பட உள்ளன.

அதற்காக, வாக்குச்சாவடியாக செயல்படும் அனைத்து பள்ளிகளையும், வரும், 15-ம் தேதி முதல் தேர்தல் ஆணையம் தங்கள் கட்டுப்பாட்டில் எடுக்கவுள்ளது. இதன் காரணமாக, ஒன்றாம் வகுப்பு முதல், ஒன்பதாம் வகுப்பு வரையிலான, ஆண்டு இறுதி தேர்வுகளை, வரும், 13-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க, பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து இன்றுக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in