
தமிழகத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்படுவதாக சுற்றுச்சூழல்துறை அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் வருகிற 12-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பட்டாசு விற்பனை தீவிரமடைந்துள்ளது. இதனிடையே கடந்த சில வருடங்களாக காற்று மாசை குறைக்கும் வகையில் பட்டாசுகள் வெடிக்கும் நேரத்திற்கு கட்டுபாடுகள் விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து பல்வேறு மாநிலங்களில், அம்மாநில அரசுகள் பட்டாசு வெடிக்கும் நேரத்தை நிர்ணயித்து அறிவிப்பது வழக்கம்.
இதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு வெடிக்கும் நேரத்தை சுற்றுச்சூழல் துறை அறிவித்துள்ளது. இதன்படி, தீபாவளி அன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் காலை 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்கலாம்.
நீதிமன்ற உத்தரவுபடி தீபாவளி பண்டிகைக்கு பசுமைப் பட்டாசுகளை மட்டுமே வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தீபாவளியன்று காற்றின் தரம் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
இன்று கர்வா சௌத்: நிலவை ஏன் பெண்கள் சல்லடை வழியே பார்க்கிறார்கள்?! விரத பலன்களைத் தெரிஞ்சுக்கோங்க!
அதிகாலையிலேயே அதிர்ச்சி... சிலிண்டர் விலை ரூ.101 உயர்வு! கதறும் பொதுமக்கள்!
பகீர்...நடுரோட்டில் போலீஸ்காரர் மீது கொலைவெறி தாக்குதல்.... அதிர்ச்சி வீடியோ
டிகிரி முடித்தவர்களுக்கு விமான நிலையத்தில் வேலை வாய்ப்பு... இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!