பகீர்...நடுரோட்டில் போலீஸ்காரர் மீது கொலைவெறி தாக்குதல்.... அதிர்ச்சி வீடியோ

தாக்கப்படும் போலீஸ்காரர்
தாக்கப்படும் போலீஸ்காரர்
Updated on
1 min read

போலீஸ்காரரை ஒரு கும்பல் நடுரோட்டில் வைத்து கொடூரமாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

உத்தரப்பிரதேச மாநிலம், மஹோபா மாவட்டத்தில் ஒரு போலீஸ்காரரை சாலையில் வைத்து ஒரு கும்பல் கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அடி பொறுக்க முடியாமல் அந்த போலீஸ்காரர், கையை வைத்து முகத்தை மறைத்தும் அவர் முகத்தில் அந்த கும்பல் குத்துவதையும், கால்களால் மிதிப்பதும் அந்த வீடியோவில் பதிவாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து மஹோபா காவல் துறை கண்காணிப்பாளர் அபர்ணா சிங், இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்களைக் கைது செய்ய உத்தரவிட்டார். அத்துடன் போலீஸ்காரரைத் தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெவித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது, மஹோபாவில் வேகமாக வந்த அரசு பேருந்து மோதியதில் 13 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்தினர் அப்பகுதியில் போராட்டம் நடத்த முயற்றுள்ளனர்.

அவர்களை சமாதானப்படுத்த முயன்ற போலீஸ்காரரை போராட்டத்தில் ஈடுபட்ட சில வாலிபர்கள் நடுரோட்டில் வைத்து கொடூரமாகத் தாக்கியுள்ளனர். அதை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவேற்றியுள்ளனர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. போலீஸ்காரரைத் தாக்கிய கும்பலை அடையாளம் காணும் முயற்சியில் இறங்கியுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

நடுரோட்டில் போலீஸ்காரரை ஒரு கும்பல் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in