குட்நியூஸ்... இன்று முதல் மின் கட்டணம் அதிரடியாக குறைப்பு!

மின் கட்டணம்
மின் கட்டணம்

அடுக்குமாடி குடியிருப்பு மின் கட்டணத்தை குறைத்து, தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், இன்று முதல் கட்டண குறைப்பு அமலுக்கு வந்தது. இது தொடர்பான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.

மின்வாரியம்
மின்வாரியம்

1 யூனிட், 8 ரூபாயிலிருந்துதான், 5 ரூபாய் 50 பைசாவாக குறைக்கப்படுவதாக கடந்த 18-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, அடுக்குமாடி குடியிருப்புகளின் பொது பயன்பாட்டுக்கான மாற்றியமைக்கப்பட்ட மின் கட்டணம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

இது பொதுமக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. காரணம், சென்னை மாநகரம் மற்றும் பிற மாநகராட்சியையொட்டி உள்ள புறநகர் பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் சிறு அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இவற்றில் பொது பயன்பாட்டுக்கான மின் கட்டணமாக 1 யூனிட்டுக்கு ரூ. 8 வரை வசூலிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in