496 காலி பணியிடங்கள்... டிகிரி, பிஇ முடித்தவர்களுக்கு விமான நிலையத்தில் வேலை வாய்ப்பு... இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

ஏர்போர்ட்
ஏர்போர்ட்

ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியாவின், ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பதவிகளுக்கான 496 காலி பணியிடங்களுக்கு இன்று நவம்பர் 1ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா, ’ஏஏஐ ஜூனியர் எக்ஸிகியூட்டிவ்’ பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுள்ள பட்டதாரிகள், ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியாவின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.aai.aero மூலம் இன்று நவம்பர் 1ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நவம்பர் 30 ஆகும்.

ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா
ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா

வயது வரம்பு: பட்டப்படிப்பு முடித்த விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 27 ஆண்டுகளாக இருக்க வேண்டும்..

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ1000.

கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள் இயற்பியல் மற்றும் கணிதத்துடன், பிஎஸ்சி அறிவியலில் 3 ஆண்டுகளுக்கான முழுநேர படிப்பாக இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது ஏதேனும் ஒரு துறையில் முழுநேர பிஇ இளங்கலைப் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். செமஸ்டர் பாடத்திட்டத்தில் ஏதேனும் ஒன்றில் இயற்பியல் மற்றும் கணிதம் பாடங்களாக இருப்பது அவசியம்.

ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா
ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா

தேர்வு நடைமுறை: ஏர் டிராஃபிக் கண்ட்ரோல் - ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பதவிக்கான தேர்வு ஆப்ஜெக்டிவ் வகையிலான வினாக்களை கொண்டிருக்கும். தேர்வும் ஆன்லைன் வாயிலாகவே நடைபெறும். தேர்வில் தவறான விடைகளுக்கு எதிர்மறை (மைனஸ்) மதிப்பெண்கள் கிடையாது.

விண்ணப்ப நடைமுறை: ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். அதற்கு www.aai.aero என்ற தளத்தை அணுகி விண்ணப்பப் படிவத்தை முறைப்படி நிரப்பி சமர்பிக்கலாம். உடன் அவசியமான ஆவணங்களை பதிவேற்றம் செய்து, விண்ணப்பக் கட்டணத்தையும் ஆன்லைன் மூலமாகவே செலுத்தி விடலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: நவம்பர் 30, 2023.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in