கட்டண உயர்வு இந்த செமஸ்டருக்கு பொருந்தாது; அமைச்சர் பொன்முடி விளக்கம்!

அமைச்சர் பொன்முடி
அமைச்சர் பொன்முடி

``தேர்வு கட்டண உயர்வு இந்த செமஸ்டர் தேர்வுகளுக்கு பொருந்தாது. அனைத்து துணை வேந்தர்களிடமும் கலந்தாலோசித்து அடுத்தாண்டு முதல் அனைத்து கல்லூரிகளிலும் ஒரே கட்டண முறையை அமல்படுத்த ஏற்பாடு செய்யப்படும்’’ என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகம்
அண்ணா பல்கலைக்கழகம்

அண்ணா பல்கலைக்கழத்தின் தேர்வுக் கட்டணம், சான்றிதழ் கட்டணம் ஆகியவற்றை உயர்த்த நிர்வாகம் ஆலோசித்து வந்தது. இதுதொடர்பாக நடத்தப்பட்ட பல்கலைக்கழக சிண்டிகேட் குழுக் கூட்டத்தில், 50 சதவீத கட்டண உயர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அதாவது, யுஜி பிராக்டிகல் மற்றும் தியரி தேர்வு என ஒவ்வொரு தாளுக்கும் தலா 150 ரூபாயாக இருந்த தேர்வுக் கட்டணம், 225 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. யுஜி புராஜெக்ட் தீசிஸ்-க்கு தேர்வுக் கட்டணம் 300 ரூபாயாக இருந்தது. தற்போது அது 450 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியான நிலையில் அது மாணவர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக இன்று விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, ‘’ அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய தகுதியில்லாத 56 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த 56 பேரும் பல்கலைக்கழகம் தனியாரிடம் இருக்கும் போது தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பல்கலைக்கழக நடவடிக்கை குழுவினரின் ஒருமித்த கருத்தால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தைப் பொறுத்தவரை, இந்த செமஸ்டரில் கட்டணம் உயராது. அடுத்த ஆண்டு முதல் அனைவருக்கும் ஒரே மாதிரியான தேர்வு கட்டணம் வசூலிப்பதற்கு துணைவேந்தர்களை அழைத்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் வினாத்தாள் வெளியான விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’ என கூறினார்.

இதையும் வாசிக்கலாமே...

அதிர்ச்சி... வேர்ல்டு கப் பைனல்... நடிகர் அமிதாப் பச்சனுக்கு தொடர்ந்து மிரட்டல்!

பிக் பாஸ் வீட்டில் ரணகளம்... விசித்ராவுடன் மல்லுக்கட்டிய நிக்ஸன்!

விஜய்சேதுபதி, மஞ்சுவாரியருக்காக புது டெக்னாலஜி... தமிழ் சினிமாவின் அடுத்த பாய்ச்சல்!

வீலிங் செய்து எமனுக்கு காலிங்... டூ வீலரில் இளைஞரின் அட்டகாசம்!

குட் நியூஸ்... இனி புக் செய்த அனைவருக்கும் ரயில் டிக்கெட்; ரயில்வேயின் புதிய திட்டம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in