ஐஷு வெளியே போனதுக்கு நீங்கள் தான் காரணம்: விசித்ரா, அர்ச்சனாவுடன் மல்லுக்கட்டிய நிக்ஸன்!

நிக்‌ஸன். ஐஷு
நிக்‌ஸன். ஐஷு
Updated on
2 min read

பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளர் ஐஷு வெளியேறியதும் கதறி அழுத சக போட்டியாளர் நிக்ஸன், அவர் வெளியேறியதற்கு விசித்ரா, அர்ச்சனாதான் காரணம் என குற்றம்சாட்டினார். அப்போதே நிச்சயம் சம்பவம் இருக்கு என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இன்றைய ப்ரோமோ அதனை நிறைவேற்றியுள்ளது.

நிக்ஸன்
நிக்ஸன்

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் தொடங்கி ஒன்றரை மாதங்களுக்கு மேலாகிறது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சி ஆரம்பம் முதலே சூடுபிடித்த வகையில் உள்ளது. வழக்கம் போல் இந்த சீசனிலும் சண்டகோழி, காதல் ஜோடிகள் என நிறைய பேர் இருக்கிறார்கள். இந்த சீசனில் ஐஷு- நிக்ஸன், மணி- ரவீனா ஆகியோர் காதல் ஜோடிகளாக வலம் வந்தனர்.

ஐஷு, நிக்ஸனால் தனது போட்டியை சிறப்பாக விளையாடவில்லை என சக போட்டியாளர்கள் குற்றம்சாட்டி அவரை நாமினேட் செய்தனர். இந்நிலையில், கடந்த வாரம் அவர் போட்டியில் இருந்து வெளியேறினார். இதனால் மிகுந்த அதிர்ச்சி அடைந்த நிக்ஸன், கதறியழுதார். அவர் வெளியேறியதற்கு விசித்ரா, அர்ச்சனாவும் தான் காரணம் என கொந்தளித்தார்.

விசித்ரா
விசித்ரா

அடுத்த நாளே இந்த விவகாரம், விஸ்பரூபமாக வெடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தீபாவளி கொண்டாட்டம், நாமினேஷன், டாஸ்க் எனச் சென்றது. இந்த நிலையில் இன்று வெளியாகியுள்ள ப்ரோமோவில் இந்த விவகாரம் வெடிக்கத் தொடங்கியுள்ளது.

அதில், நானும் ஐஷுவும் பேசியது தவறு என்றால், மணி - ரவீனா, விஷ்ணு - பூர்ணிமா பேசுவதும் தப்புதான். நீ யாரா வேணாலும் இருந்துட்டு போ என விசித்ராவை நோக்கி நிக்ஸன் ஆவேசமாக பேசுகிறார்.

பிக் பாஸ் இல்லம்
பிக் பாஸ் இல்லம்

இதனிடையே அர்ச்சனாவும் தான் காரணம் என நிக்ஸன் கூற, 40 நாட்கள் ஐஷு எதுவுமே செய்யாமல் இருந்ததற்கு நிக்ஸன் தான் காரணம், எல்லோரும் ஒரு நாள் எலிமினேட்டாகி வெளியே தானே போகப்போறாங்க, அப்போ போய் பார்த்துக்கோ என நிக்ஸனுக்கு அர்ச்சனா பதிலடி கொடுக்கிறார்.

ப்ரோமோ வெளியான நிலையில், நிக்ஸன் விசித்ராவை ஒருமையில் பேசுவது தப்பு அவரைக் கண்டிக்க வேண்டுமென ரசிகர்கள் விசித்ராவுக்கு ஆதரவாக கமெண்ட்டுகளைத் தெறிக்கவிட்டு வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in