பகீர்: வீலிங் செய்து எமனுக்கு காலிங்: செங்கல்பட்டில் இளைஞர் அட்டகாசம்!

செங்கல்பட்டில்  வீலிங்  செய்யும் இளைஞர்
செங்கல்பட்டில் வீலிங் செய்யும் இளைஞர்

தமிழகத்தில் மிகவும் பிரபலமான யூடியூபராக வலம் வருபவர் டிடிஎஃப் வாசன். இவர் தனது பைக் சாகசங்களை வீடியோவாக பதிவேற்றி, இளைஞர்களை கவர்ந்து வந்தார்.

இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் காஞ்சிபுரம் அருகே வீலிங் செய்து விபத்துக்குள்ளான வழக்கில், அவர் சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். இன்று பல இளைஞர்கள் டிடிஎஃப் வாசனை முன்மாதிரியாக கொண்டு வீலிங் செய்து சாகசங்களை நிகழ்த்துகின்றனர்.

அண்மையில் திருச்சியில் தீபாவளி அன்று பட்டாசுகளை இருசக்கர வாகனத்தில் வைத்து வீலிங் செய்தவரே பட்டாசு வெடித்து அட்ரா சிட்டி செய்த இளைஞர்களும் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடி பகுதியில் இளைஞர் ஒருவர் வீலிங் சாகசம் நிகழ்த்தி வருகிறார். மேலும், அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கமான duke_gokul என்கிற ஐடி-ல் பதிவேற்றிருக்கிறார்.

இந்த வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலா பரவி வருகிறது. அதுமட்டுமில்லாமல் இவர் விதவிதமாக கலர், கலராக சட்டை அணிந்துகொண்டு இருசக்கர வாகனத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் ஆபத்தான முறையில் மக்களை அச்சுறுத்தும் வகையில் வீலிங் செய்கிறார்.

இரண்டு கைகளையும் விட்டு வண்டி ஓட்டுவது என சாகச காட்சிகளை மட்டுமே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதனால், அச்சமடைந்துள்ள மக்கள் செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

HBD Geminiganesan|தமிழ் சினிமாவின் காதல் மன்னன்... ‘ஜெமினி கணேசன்’ பிறந்தநாள் ஸ்பெஷல்!

HBD Roja|ஆந்திர அரசியலின் பீனிக்ஸ் பறவை நடிகை ரோஜா பிறந்தநாள் ஸ்பெஷல்!

இன்று வங்கக்கடலில் உருவாகிறது 'மிதிலி' புயல்... வானிலை மையம் எச்சரிக்கை!

அதிர்ச்சி அறிவிப்பு: டெல்லி செல்லும் தென்மாவட்ட ரயில்கள் முழுமையாக ரத்து!

அதிர்ச்சி: பயிற்சியின் போது மாரடைப்பால் 30 வயது விமானி உயிரிழப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in