’விடுதலை2’ படத்தில் டீ-ஏஜிங் டெக்னாலஜி...வெளியானது அடுத்த அப்டேட்!

’விடுதலை’...
’விடுதலை’...

'விடுதலை’ படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், படம் குறித்து வெளியான சூப்பர் அப்டேட் ஒன்று ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

நடிகர் சூரி ‘விடுதலை’ படத்தில்...
நடிகர் சூரி ‘விடுதலை’ படத்தில்...

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய ‘துணைவன்’ சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு, வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான படம் ‘விடுதலை’. சூரி கதையின் நாயகனாக நடிக்க விஜய்சேதுபதி, சேத்தன் உள்ளிட்ட பலர் இதில் நடித்திருந்தனர். இதன் முதல் பாகம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற நிலையில், இரண்டாம் பாகம் குறித்தான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

முதல் பாகத்தில் சூரி கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவானது. இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதியின் ‘வாத்தியார்’ கதாபாத்திர பின்னணி விரிவாகக் காட்டப்படும் என்பதாக அதன் முதல் பாகம் முடிவுற்றிருந்தது.

விஜய்சேதுபதி, மஞ்சு வாரியர்...
விஜய்சேதுபதி, மஞ்சு வாரியர்...

இரண்டாம் பாகத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்க இருக்கிறார். இவர்கள் இருவருக்குமான போர்ஷன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில் ஃபிளாஷ்பேக் காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் விஜய்சேதுபதி, மஞ்சு வாரியர் இருவருக்கும் வயதானவர்களை இளமையாகக் காட்டும் டீ-ஏஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அடுத்த வருடம் கோடை விடுமுறைக்குப் படம் வெளியாகவுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதையும் வாசிக்கலாமே...

HBD Geminiganesan|தமிழ் சினிமாவின் காதல் மன்னன்... ‘ஜெமினி கணேசன்’ பிறந்தநாள் ஸ்பெஷல்!

HBD Roja|ஆந்திர அரசியலின் பீனிக்ஸ் பறவை நடிகை ரோஜா பிறந்தநாள் ஸ்பெஷல்!

இன்று வங்கக்கடலில் உருவாகிறது 'மிதிலி' புயல்... வானிலை மையம் எச்சரிக்கை!

அதிர்ச்சி அறிவிப்பு: டெல்லி செல்லும் தென்மாவட்ட ரயில்கள் முழுமையாக ரத்து!

அதிர்ச்சி: பயிற்சியின் போது மாரடைப்பால் 30 வயது விமானி உயிரிழப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in