
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளார் அமைச்சர் நமச்சிவாயம்.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை (14ம்தேதி) உருவாகக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி, மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாயப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கனமழை காரணமாக ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்றும், நாளையும் கடலோர மாவட்டங்களில் கனமழை முதல் அதிகனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்திய வானிலை மையத்தின் கனமழை எச்சரிக்கை மற்றும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள காரணத்தினாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுகிறது என புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...
சிவகாசி : தீபாவளிக்கு ரூ.6,000 கோடிக்கு பட்டாசுகள் விற்பனை!
நாளை தெறிக்கப் போகுது தமிழகம்... 234 தொகுதிகளில் 8,647 கி.மீ தூரம் திமுக வாகனப் பேரணி!
பனிக்குடம் உடைந்து கதறிய கர்ப்பிணி: 108 ஆம்புலன்ஸில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!!
இடுப்பளவு நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்: தொடர் மழையால் விவசாயிகள் கண்ணீர்!