மதுபாட்டில்களை திரும்ப தந்தவர்களுக்கு ரூ.297 கோடி வழங்கப்பட்டுள்ளது... உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் தகவல்!

டாஸ்மாக் மது
டாஸ்மாக் மது

மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தின் மூலம் இதுவரை ரூ.306 கோடி வசூலிக்கப்பட்டு, பாட்டில்களை திரும்ப தந்தவர்களுக்கு ரூ.297 கோடி வழங்கப்பட்டுள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது

கண்ணாடி மதுப்பாட்டில்களால் வனவிலங்குகள் பாதிக்கப்படும் நிகழ்வுகள் அதிகம் நடந்தன. எனவே வனப் பாதுகாப்பு தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தமிழ்நாட்டில், மலை பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில், மதுபாட்டில்களை கூடுதலாக ரூ.10க்கு விற்பனை செய்து, காலி மதுபாட்டில்களை திருப்பி தரும் போது, அந்த கூடுதலாக வசூலித்த ரூ.10யை திருப்பிக் கொடுக்கும், காலி மதுபாட்டில் திரும்பப்பெறும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.

டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் 2022 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நீலகிரி, ஏற்காடு, கொடைக்கானல் போன்ற மலை மாவட்டங்களில் முதலில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதை தொடர்ந்து உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின் அடிப்படையில் மேலும் சில மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டது. தற்போது சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளிலும் காலி பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

உயர் நீதிமன்றம்
உயர் நீதிமன்றம்

இந்த நிலையில் டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் காலி பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்கு நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரதசக்ரவர்த்தி ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் தாக்கல் செய்த அறிக்கையில், ‘ டாஸ்மாக் மதுக்கடைகளில் காலி பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் செயல்படுத்தப்படும் 12 மாவட்டங்களிலிருந்து இதுவரை ரூ.306 கோடியே 32 லட்சத்து 25,330 வசூலிக்கப்பட்டுள்ளது. பாட்டில்களை திரும்ப தந்தவர்களுக்கு ரூ.297 கோடியே 97 லட்சத்து 61,280 திரும்ப தரப்பட்டுள்ளது. காலி பாட்டில்களை திரும்பத்தராமல் இருப்பதன் மூலம் உபரியாக உள்ள ரூ.9 கோடியே 19 லட்சத்து 64,050 தனி கணக்கில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும், 5 மாவட்டங்களில் இந்த திட்டம் புதிதாக செயல்படுத்தப்பட்டு ரூ. 56 கோடியே 45 லட்சத்து 41,260 வசூலிக்கப்பட்டு காலி பாட்டில்களை திரும்ப தந்தவர்களுக்கு ரூ. 54 கோடியே 64 லட்சத்து 88,870 திரும்ப தரப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகை ரூ.2 கோடியே 19 லட்சத்து 47,350 தனி கணக்கில் வைக்கப்பட்டுள்ளது. மொத்தமாக தமிழகம் முழுவதும் காலி மதுபாட்டில்கள் திரும்ப பெறும் திட்டத்தின் மூலம் வசூலிக்கப்பட்ட தொகை மற்றும் திரும்ப தரப்பட்ட தொகை தொடர்பாக ஆய்வு செய்து உரிய அறிக்கை தாக்கல் செய்யப்படும்’ என்று கூறப்பட்டுள்ளது.

டாஸ்மாக்
டாஸ்மாக்

ஆனால், டாஸ்மாக் நிர்வாகம் தாக்கல் செய்த அறிக்கையில் உள்ள கணக்கில் தொகை விவரங்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்தது. இதையடுத்து, தொகையை சரி பார்த்து மீண்டும் புதிய அறிக்கையை தாக்கல் செய்வதாக டாஸ்மாக் தரப்பு வழக்கறிஞர் கூறினார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிமன்றம், தெளிவான புதிய அறிக்கையை தாக்கல் செய்யுமாறு டாஸ்மாக் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 7ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது.

இதையும் வாசிக்கலாமே...

உருவாகிறது ரஜினிகாந்த் பயோபிக்... தனுஷின் ஆசை நிறைவேறுமா?

நடிகை ஸ்ரீதேவியுடன் புகைபிடிக்கும் ராம்கோபால் வர்மா... மார்ஃபிங் புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி!

பெட்ரோல் பங்க் ஊழியரை முகம் சுளிக்க வைத்த பெண்... வைரலாகும் வீடியோ!

காதல் விவகாரத்தில் விபரீதம்... 4-வது மாடியில் இருந்து கீழே குதித்து கல்லூரி மாணவி தற்கொலை!

கோவிஷீல்ட் தடுப்பூசியால் மகள் மரணம்; சீரம் இன்ஸ்டிடியூட் மீது பெற்றோர் வழக்குப்பதிவு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in