கோவிஷீல்ட் தடுப்பூசியால் மகள் மரணம்; சீரம் இன்ஸ்டிடியூட் மீது பெற்றோர் வழக்குப்பதிவு!

உயிரிழந்த மாணவி ரித்தாயிகா
உயிரிழந்த மாணவி ரித்தாயிகா

கொரோனா தடுப்பூசியாக கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் இறந்ததாகக் கூறப்படும் இளம்பெண்ணின் பெற்றோர்கள், சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அஸ்ட்ராஜெனெகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட கோவிஷீல்ட், இந்தியாவின் சீரம் இன்ஸ்டிடியூட் மூலம் தயாரிக்கப்பட்டு நாட்டில் பரவலாக கொரோனா காலக்கட்டத்தில், பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டது.

த்ரோம்போசிஸ் வித் த்ரோம்போசைட்டோபீனியா சிண்ட்ரோம்(TTS) - இரத்த உறைவு மற்றும் குறைந்த இரத்த பிளேட்லெட் எண்ணிக்கையை கோவிட் தடுப்பூசியாக பயன்படுத்தப்பட்ட கோவிஷீல்டு தடுப்பூசி ஏற்படுத்தும் வாய்ப்புகள் உண்டு என்று மருந்து தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தில் ஒப்புதல் கொடுத்துள்ள நிலையில், இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கோவிட்-19 க்கு எதிரான கோவிஷீல்டு தடுப்பூசி ரத்த உறைவை ஏற்படுத்தும் சாத்தியங்கள் இருப்பதாக கோவிஷீல்டு தடுப்பூசிகளைத் தயாரித்த அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் நீதிமன்ற ஆவணங்களில் ஒப்புக்கொண்டுள்ளது. இந்நிறுவனம் உலகளவில் கோவிஷீல்டு மற்றும் வேக்ஸிவ்ரியா போன்ற பிராண்ட் பெயர்களில் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் 18 வயதான ரித்தாயிகா ஸ்ரீ ஓம்ட்ரி எனும் மாணவி, தனது முதல் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசியை செலுத்திக் கொண்டார். தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஏழு நாட்களுக்குள், ரிதாயிகாவுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் தொடர்ந்து வாந்தியும், மயக்கமும் வந்த நிலையில், நடக்கவும் முடியாமல் அவதிப்பட்டுள்ளார் ரிதாயிகா.

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி

சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மாணவி ரிதாயிகாவுக்கு எம்ஆர்ஐ ஸ்கேன் எடுத்துப் பார்த்ததில், அவருடைய மூளையில் பல இரத்த உறைவுகளும், இரத்தப்போக்கும் இருந்தது தெரிய வந்தது. அடுத்த இரண்டே வாரங்களில் சிகிச்சைப் பலனளிக்காமல் ரித்தாய்கா பரிதாபமாக உயிரிழந்தார்.

ரித்தாய்காவின் இறப்புக்கான சரியான காரணம் அப்போது அவரது பெற்றோருக்கு தெரியவில்லை. பின்னர் கடந்த டிசம்பர் 2021ல் ஆர்டிஐ மூலம், தங்களது மகள் ரிதாய்கா த்ரோம்போசிஸ் வித் த்ரோம்போசைட்டோபீனியா சிண்ட்ரோம் நோயால் பாதிக்கப்பட்டு, தடுப்பூசி தயாரிப்பு தொடர்பான எதிர்வினை காரணமாக உயிரிழந்தார் என்பதை அவரது பெற்றோர் தெரிந்து கொண்டனர்.

இதே போன்ற வேறொரு சம்பவத்தில், திரு.வேணுகோபால் என்பவரின் மகள் காருண்யாவும் தடுப்பூசி போட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு கடந்த ஜூலை 2021ல் உயிரிழந்துள்ளார். அவரது மரணம் தடுப்பூசியால் ஏற்பட்டது என்று முடிவு செய்ய போதுமான ஆதாரம் இல்லை என்று அப்போது தேசியக் குழு முடிவு செய்தது.

பல குடும்பங்கள், நீதிமன்றப் புகாரின் மூலம், அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி பேரழிவு தரக்கூடிய பக்க விளைவுகளை ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டி வருகின்றனர்.

ஆஸ்ட்ராஜென்கா
ஆஸ்ட்ராஜென்கா

கடந்த ஏப்ரல் 2021ல் அஸ்ட்ராஜெனெகாவின் கோவிஷீல்டு தடுப்பூசியை செலுத்திக் கொண்ட பின்னர், தான் நிரந்தரமாக மூளைக் காயத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜேமி ஸ்காட் என்பவர் ஒரு வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் கோவிஷீல்டு தடுப்பூசிகள் அதன் செயல்திறனைக் காட்டினாலும், அரிதான பக்க விளைவுகள் தோன்றுவது ஒழுங்குமுறை ஆய்வு மற்றும் சட்ட நடவடிக்கையைத் எதிர்நோக்கியிருக்கிறது.

சட்ட நடவடிக்கைகள் வெளிவரும்போது, ​​பாதிக்கப்பட்ட தனிநபர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் நியாயமான இழப்பீடுகளையும், தடுப்பூசியால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கான நிறுவனத்தின் ஒப்புதலையும் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in