நடிகை ஸ்ரீதேவியுடன் புகைபிடிக்கும் ராம்கோபால் வர்மா... மார்ஃபிங் புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி!

ஸ்ரீதேவி, ராம்கோபால் வர்மா
ஸ்ரீதேவி, ராம்கோபால் வர்மா

’மறைந்த நடிகை ஸ்ரீதேவியை சந்திப்பதற்காக நான் சொர்க்கத்திற்கு வந்திருக்கிறேன்’ என இயக்குநர் ராம் கோபால் வர்மா புகைப்படம் ஒன்றை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். காரில் ஸ்ரீதேவிக்கு அருகில் அமர்ந்து சிகரெட் பிடிப்பது போன்று அவர் பகிர்ந்திருக்கும் படத்தைப் பார்த்துவிட்டு ஸ்ரீதேவி ரசிகர்கள் அதிர்ந்து போய்க் கிடக்கிறார்கள்.

சர்ச்சைகளுக்குப் பஞ்சமில்லாதவர் இயக்குநர் ராம்கோபால் வர்மா. தன் படங்களில் இல்லாத என்டர்டெயின்மென்ட்டை தனது சமூகவலைதளங்களில் தன்னைப் பின்தொடர்பவர்களுக்கு கொடுத்து வருபவர். நடிகைகளுடன் நெருக்கமாக புகைப்படங்களை பகிர்வது, அரசியல்வாதிகளை வம்பிழுப்பது என வலம் வந்தவர் இப்போது ஒருபடி மேலே போய், மறைந்த திரைப்பிரபலங்களையும் தனது சமூகவலைதளப் பக்கத்திற்கு கூட்டி வந்துள்ளார்.

அந்த வகையில், மறைந்த நடிகை ஸ்ரீதேவியுடன் காருக்குள் அமர்ந்து புகைப்பிடிப்பது போன்ற ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார் ராம்கோபால் வர்மா. இதைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்து, ‘ஸ்ரீதேவியை சந்திப்பதற்காக சொர்க்கத்திற்கு வந்துள்ளேன்’ எனக் கேப்ஷன் கொடுத்துள்ளார் வர்மா.

ஸ்ரீதேவியை வைத்து 'க்ஷண க்ஷணம்' என்ற படத்தை இயக்கினார் ராம்கோபாம் வர்மா. இந்தப் படம் ஸ்ரீதேவிக்கு தன்னுடைய காதல் கடிதம் என்றும் முன்பு உருகினார். இப்படியான சூழ்நிலையில்தான் ஸ்ரீதேவியுடன் புகைப்பிடிப்பது போன்ற படத்தைப் பகிர்ந்துள்ளார்.

'க்ஷண க்ஷணம்' படக்குழுவினருடன்
'க்ஷண க்ஷணம்' படக்குழுவினருடன்

இதைப் பார்த்த ஸ்ரீதேவி ரசிகர்கள் பலரும், ராம்கோபால் வர்மாவின் செயல் அருவருப்பாக உள்ளதாகத் தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்தப் படத்தை ராம்கோபால் வர்மா உடனடியாக நீக்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர். முன்னதாக ஊழல் வழக்கில் கைதான சந்திரபாபு நாயுடு இருந்த சிறை முன்பு ராம்கோபால் வர்மா செல்ஃபி எடுத்துப் பகிர்ந்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் வாசிக்கலாமே...

சென்னையில் இருந்து நாளை முதல் சிறப்பு பேருந்துகள்... செல்போனில் முன்பதிவு செய்யலாம்!

காற்றில் கரைந்த கீதம்... பிரபல பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்!

‘எங்களை வெற்றிபெறச் செய்யாது போனால் மின்சாரத்தை துண்டிப்போம்’ வாக்காளர்களை மிரட்டிய காங்கிரஸ் எம்எல்ஏ

மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் திடீர் ராஜினாமா... அதிர வைக்கும் பின்னணி காரணம்!

ஷாக்... ஜிம்மில் சுருண்டு விழுந்து உயிரிழந்த வாலிபர்: வெளியான அதிர்ச்சி வீடியோ!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in