பெட்ரோல் பங்க் ஊழியரை முகம் சுளிக்க வைத்த பெண்... வைரலாகும் வீடியோ!

சிசிடிவி காட்சி
சிசிடிவி காட்சி

டெல்லியில் பெட்ரோல் பங்க் ஊழியர் முன்பாக இளம்பெண் ஒருவர் தனது பேன்டை கழட்டி காட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிசிடிவி காட்சி
சிசிடிவி காட்சி

டெல்லியில் பெட்ரோல் பங்குக்கு வந்த பெண் ஒருவர், ஊழியர் முன்பாக பேண்டை கழட்டி காட்டும் சிசிடிவி வீடியோ, தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஏப்ரல் 30-ம் தேதி நள்ளிரவு 2.30 மணியளவில் இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் பங்கிற்கு ஒரு பெண் தனது தோழியுடன் வந்திருக்கிறார். அந்தப் பெண் திடீரென பெட்ரோல் பங்க் ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுட்டிருக்கிறார். வாக்குவாதம் முற்றிப் போனதால் ஒரு கட்டத்தில் அந்தப் பெண் தனது வாகனத்தைவிட்டு கீழே இறங்கி வந்து பெட்ரோல் பங்க் ஊழியரிடம் தனது பேன் டை கழட்டிக் காட்டி இருக்கிறார். இவை அனைத்தும் தற்போது வைரலாகி வரும் அந்த வீடியோவில் பதிவாகி இருக்கிறது.

அந்தப் பெண் எதற்காக இவ்வாறான செயலில் ஈடுபட்டார்... பெட்ரோல் பங்க் ஊழியர் தன்னைக் கிண்டல் செய்ததால் அந்தப் பெண் அவ்வாறு நடந்து கொண்டாரா என எதுவுமே தெரியவில்லை.

சமூகவலைதளங்களில் வைரலாகும் இந்த வீடியோவை பார்த்து, நெட்டிசன்கள் பலவிதமான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். ‘பெட்ரோல் பங்க் ஊழியர் அவமரியாதையாக நடந்து கொண்டாரா, பெட்ரோல் போடாமல் நெடுநேரம் காக்க வைத்தாரா, எந்த இடையூறும் கொடுக்காமல் இதுபோன்று பெண் ஒருவர் எப்படி நடந்துக் கொள்வார்?’ என்று அந்தப் பெண்ணுக்கு ஆதரவாக கருத்துகளையும் ‘அதீத சுதந்திரத்தால் பெண்கள் இதுபோன்று பொதுவெளியில் நடந்து கொள்கிறார்கள்’ என்பது போன்ற எதிரான கருத்துகளையும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். இந்த சிசிடிவி வீடியோ குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

சென்னையில் இருந்து நாளை முதல் சிறப்பு பேருந்துகள்... செல்போனில் முன்பதிவு செய்யலாம்!

காற்றில் கரைந்த கீதம்... பிரபல பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்!

‘எங்களை வெற்றிபெறச் செய்யாது போனால் மின்சாரத்தை துண்டிப்போம்’ வாக்காளர்களை மிரட்டிய காங்கிரஸ் எம்எல்ஏ

மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் திடீர் ராஜினாமா... அதிர வைக்கும் பின்னணி காரணம்!

ஷாக்... ஜிம்மில் சுருண்டு விழுந்து உயிரிழந்த வாலிபர்: வெளியான அதிர்ச்சி வீடியோ!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in