தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை

தமிழகத்துக்கு வருகிறார் ராகுல் காந்தி... வேகமெடுக்கும் காங்கிரஸ் பிரச்சாரம்!

இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாட்டில் விரைவில் ராகுல் காந்தி சூறாவளி பிரச்சாரம் செய்ய உள்ளார் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர் சந்திப்பு
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர் சந்திப்பு

சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,” நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஏ மற்றும் பி படிவம் வழங்கப்பட்டது. இன்று முதல் காங்கிரஸ் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர். விளவங்கோடு இடைத்தேர்தல் வேட்பாளர் பெயரையும், மீதமுள்ள இரண்டு தொகுதி வேட்பாளர்களையும் இன்று மாலைக்குள் அறிவிக்க இருக்கிறோம்.

பாஜக அரசால் காங்கிரஸ் கட்சியின் நிதி ஏறக்குறைய ரூ.285 கோடி திருடப்பட்டுள்ளது. மோடி, காங்கிரஸ் மற்றும் ஜனநாயகத்திற்காக குரல் கொடுக்கும் கட்சிகளை தொடர்ந்து ஒடுக்கி வருகிறார். 2017-18 நிதி ஆண்டில் நாங்கள் தாமதமாக தாக்கல் செய்தோம் என்பதற்காகவும், இன்னொரு வழக்கு தாக்கல் செய்யவில்லை என்பதற்காகவும் 11 கணக்குகள் மோடி அரசால் முடக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சி தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல்
காங்கிரஸ் கட்சி தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல்

காங்கிரஸ் கட்சியிலிருந்து ரூபாய் 115.32 கோடியை பாஜக எடுத்து உள்ளது. இதனை காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. காங்கிரஸை முடக்க வேண்டும், தலைவர்கள் மக்களை சந்திக்கக் கூடாது, போக்குவரத்திற்கு இடையூறு செய்ய வேண்டும், நிதி ஆதாரத்தை முடக்கினால் அரசியல் இயக்கம் முடங்கி விடும், காங்கிரஸையும் முடக்கி விடலாம் என்று மோடி பகல் கனவு கண்டு கொண்டிருக்கிறார். மக்களுக்கான இயக்கம் காங்கிரஸ் கட்சி. பணம் ஒரு பொருட்டே கிடையாது. மக்களை நம்பி காங்கிரஸ் கட்சி உள்ளது. ஏற்கனவே தேர்தல் ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்றத்திடம் வி. பேட் 100% எண்ணப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்து உள்ளோம். தோழமைக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்” என்றார்.

இந்த செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சியின் போது, காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் திருவள்ளூர் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், கரூர் வேட்பாளர் ஜோதிமணி, கடலூர் வேட்பாளர் விஷ்ணு பிரசாத், கன்னியாகுமரி வேட்பாளர் விஜய் வசந்த் ஆகியோர் உடனிருந்தனர்.

இதையும் வாசிக்கலாமே...

இன்றும், நாளையும் மின்சார ரயில்கள் கும்மிடிப்பூண்டிக்கு செல்லாது!

லடாக்கில் ஹோலி கொண்டாட்டம்... ராணுவ வீரர்களுடன் ராஜ்நாத் சிங் பங்கேற்பு!

பாஜக வேட்பாளரானார் கங்கனா ரணாவத்... இமாச்சலப் பிரதேசத்தில் போட்டி!

யாருக்கென்று வாக்கு கேட்பார் ஸ்டாலின்? வேட்பாளர் அறிவிக்காத நிலையில் நெல்லையில் பிரச்சாரம்!

'சிவசக்தி'க்கு சர்வதேச விண்வெளி யூனியன் அங்கீகாரம்... நிலவின் அந்த பகுதிக்கு இனி இதுதான் பெயர்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in