மின்சார ரயில்கள் கும்மிடிப்பூண்டிக்கு செல்லாது... இன்றும் நாளையும் இதுதான் நிலைமை!

கும்மிடிப்பூண்டி  ரயில் நிலையம்
கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம்

இன்றும், நாளையும் சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயில்கள்  மீஞ்சூர் வரையே இயக்கப்படும் என்று ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ”பொன்னேரி - மீஞ்சூா் ரயில் நிலையங்களுக்கிடையே ரயில்வே தண்டவாளப் பராமரிப்புப் பணி நடைபெறுவதன் காரணமாக அந்த வழியாகச் செல்லும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு காலை 9.30 மற்றும் 10.35 மணிக்கு புறப்படும் மின்சார ரயில்கள் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை மீஞ்சூருடன் நிறுத்தப்படும். 

இதே தேதிகளில் கடற்கரையில் இருந்து காலை 9.40 மணிக்கு புறப்படும் ரயில் எண்ணூருடன் நிறுத்தப்படும். சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 9 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயில் புதன்கிழமை (மார்ச் 27) மீஞ்சூருடன் நிறுத்தப்படும். மறுமாா்க்கமாக கும்மிடிப்பூண்டியில் இருந்து காலை 9.55 மற்றும் 10.55 மணிக்கு புறப்படும் ரயில்கள் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை மீஞ்சூரில் இருந்து இயக்கப்படும். 

சூலூா்பேட்டையில் இருந்து காலை 10 மணிக்கு புறப்படும் ரயில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை எண்ணூரில் இருந்து இயக்கப்படும் என ரயில்வே அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த மார்க்கத்தில் பயணிக்கும் பயணிகள் அதற்கான மாற்று ஏற்பாடுகள் மற்றும் முன்னேற்பாடுகளை செய்து கொள்ளுமாறு” தெரிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in