இவர்களுடன் தான் கூட்டணி - பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு அறிவிப்பு!

பிரமலதா விஜயகாந்த் செய்தியாளர்கள் சந்திப்பு
பிரமலதா விஜயகாந்த் செய்தியாளர்கள் சந்திப்பு

14 மக்களவைத் தொகுதியும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் வழங்குபவர்களுடன் தேமுதிக கூட்டணி வைக்கும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தேமுதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
தேமுதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

மக்களவைத் தேர்தலில் கூட்டணி நிலைப்பாடு குறித்து தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் முன்னிலையில் சென்னை கோயம்பேடு கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொள்ள 79 மாவட்ட செயலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் 72 பேர் கூட்டத்தில் பங்கேற்று தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்தனர்.

கூட்டத்தில் பங்கேற்ற பெரும்பான்மையான மாவட்ட செயலாளர்கள் மக்களவைத் தேர்தல் மட்டும் இன்றி வருகின்ற சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு கூட்டணி அமைக்க வேண்டும் என தெரிவித்தனர். மேலும், தொகுதி பங்கீட்டில் எந்தவித சமரசமும் இல்லாமல் செல்வாக்கு மிக்க பகுதிகளை கேட்டுப் பெற வேண்டும் எனவும் தலைமையிடம் தெரிவித்தனர்.

தேமுதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
தேமுதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

நேரடியாகவும், கடிதம் வாயிலாகவும் மாவட்ட செயலாளர்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, 5 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நிறைவுக்கு வந்தது. இந்த கூட்டத்தில் துணைப் பொதுச் செயலாளர் சுதீஷ் , பார்த்தசாரதி உட்பட பலர் பங்கேற்றனர்.

தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது, “வள்ளல் விஜயகாந்த் நினைவு அறக்கட்டளை மூலமாக கட்சி அலுவலகத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்த வரும் அனைவருக்கும் தொடர்ந்து அன்னதானம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்

தேமுதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
தேமுதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

மேலும், தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கு தமிழக அரசு மரியாதை அளித்து கௌரவித்ததற்கு தமிழக முதல்வருக்கு தனது நன்றியையும் வெளிப்படுத்தினார். தொடர்ந்து பேசியவர், விஜயகாந்த் பற்றி பேசும் போது தான் கொஞ்சம் எமோஷனல் ஆகி வருவதாகவும் கூறினார். மேலும், தனக்கென தன் மறைவிற்குப் பின் ஒரு இடம் இருப்பதாக விஜயகாந்த் அடிக்கடி தெரிவிப்பார். அது கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தை எண்ணி தான் தெரிவித்தார் என்பது விஜயகாந்த் நினைவிடத்தில் மரியாதை செலுத்த வருபவர்களின் அன்பை பார்க்கும் போது வெளிப்படுகிறது என்றார்.

தேமுதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
தேமுதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

மேலும், “இன்று நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி, மக்களவைத் தேர்தலில் தேமுதிகவின் நிலைப்பாடு குறித்து கருத்து கேட்கப்பட்டது. பெரும்பாலான மாவட்ட செயலாளர்களின் கருத்து தேமுதிக வரும் தேர்தலில் தனித்து நிற்க வேண்டும் என்பது. காரணம் அந்த அளவுக்கு பொதுமக்கள் மத்தியில் தற்போது தேமுதிகவிற்கு வாக்களிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. அதற்கென அதனை வெறும் அனுதாப அலையாக யாரும் எண்ணிவிட வேண்டாம். தற்போது தேமுதிகவின் முன்பு நான்கு வாய்ப்புகள் உள்ளன. அதில் ஒன்று தனித்துப் போட்டி. மீதமுள்ள மூன்று திமுக, அதிமுக, பாஜக என ஏதேனும் ஒரு கூட்டணியில் எந்த கட்சி அதிகபட்ச தொகுதியை ஒதுக்கி தருகிறார்களோ அந்தக் கட்சியுடன் கூட்டணியில் இடம்பெற வேண்டும். இது தான் மாவட்ட செயலாளர்களின் கருத்தாக உள்ளது.

பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர் சந்திப்பு
பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர் சந்திப்பு

யார் அதிக தொகுதி வழங்குகிறார்களோ அவர்களுடன் கூட்டணி அமைப்போம். இதுவரை எந்த கட்சியிடனும் தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தவில்லை. தேர்தல் யூகங்களுக்கு தொண்டர்கள் யாரும் முக்கியத்துவம் அளிக்க வேண்டாம். குழு அமைத்தே கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி தொகுதியை வெளிப்படையாக இறுதி செய்வோம். 14 மக்களவைத் தொகுதியும், ஒரு மாநிலங்களவை தொகுதியும் யார் தருகிறாரோ அவர்களுடனே கூட்டணி அமைக்க திட்டமிட்டுள்ளோம்.

தற்போது யார் கொள்கை அடிப்படையில் கூட்டணி வைக்கிறார்கள். சீட் அதிகமாக தரும் இடங்களில் தானே கூட்டணிகள் அமைக்கப்படுகின்றன. தேமுதிகவிற்கு என கொள்கை, சித்தாந்தம், சமூக நீதி அனைத்தும் உள்ளது” என்று தெரிவித்தார். மேலும், நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்துள்ள நிலையில், அவருக்கு தேமுதிக சார்பில் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டார்.

இதையும் வாசிக்கலாமே...

ரசிகர்கள் அதிர்ச்சி... விஜய் கட்சிக்கு TVK பெயர் கிடைக்காது!?

அதிகாரிகளை அலறவிடும் ஆட்சியர்... திருப்பத்தூர் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி!

ரூ.200 கோடி சம்பளத்தை உதறிய விஜய்... பிரபல தயாரிப்பாளர் பரபரப்பு!

உதகையில் பயங்கர நிலச்சரிவு; மண்ணில் புதைந்து 7 பேர் பலியான சோகம்

தாயைக் கொன்ற மகன்... வழக்கில் திடீர் திருப்பம்... கணவனே மனைவியைக் கொன்றது அம்பலம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in